.

Pages

Wednesday, August 21, 2013

அதிரையில் திருமண வீட்டை தேடி வரும் குப்பை வண்டி குறித்து பொதுமக்களின் கருத்துகள் [ காணொளி ]

அதிரையில் நடைபெறும் திருமண வைபவங்களின் போது பயன்படுத்திவிட்டு தூக்கிவீசும் பிளாஸ்டிக் கழிவுகளால் நகரில் குப்பைகள் குமிகின்றதை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குப்பை வண்டியை அனுப்பி வைத்து கழிவுகளை சேகரிப்பது என்றும் இதற்கு கட்டணமாக ரூபாய் 500/- வசூலிப்பது என்று முடிவு செய்துள்ளதையடுத்து நடுத்தெருவில் இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் இந்த திட்டம் நடைமுறையில் கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து அதிரை நியூஸ் சார்பாக அதிரையர் சிலரை அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

10 comments:

  1. இது அருமையான திட்டம்...ரோட்டில் கொட்டி அதனால் ஏற்படும் தீங்குகளை தடுக்கவல்ல இத்திட்டம் வரவேற்கத்தக்கது..!

    ReplyDelete
  2. நல்ல ஏற்பாடு கல்யாண வீட்டார் ஒத்துழைக்கவும்

    ReplyDelete
  3. நல்ல திட்டம்தான் பாராட்டப்படவேண்டியவை.

    அப்படியே நமதூரில் ஆங்காங்கே நிறைந்து கிடக்கும் குபபைகூலங்கள் கழிவுகளையும் சுத்தம் செய்ய கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  4. வரவேற்க வேண்டிய திட்டம் !

    ஆனால் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் குப்பை வண்டிகளை நாள் முழுக்க திருமண வீட்டிலேயே பயன்படுத்தாமல் இந்த திட்டத்திற்கென்று தனியாக ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் திருமண வீட்டில் சேரும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களைக்கொண்டே அள்ளச்செய்தல் வேண்டும்.

    ReplyDelete
  5. This Is Jabreen I Need Abdul Rahman Mobail No Plz.............Thanks

    ReplyDelete
  6. வரவேற்கத்தக்கது...சாப்பாடு கழிவுகளை எளிதாக அத்தெருவை விட்டு அப்புறப்படுத்தி துர்நாற்றத்தை போக்க சரியான முடிவு.

    கட்டணம் கொடுத்து கழிவுகளை அள்ளுவதற்கான காரணம் உழியரின் ஊதிய செலவிற்கா என்பதனை சரியாக விளக்கவும்?

    ஒவ்வொரு தெருமுனையுலும் ஒவ்வொரு குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டும் அதனுள்ளேயே இக்குப்பைகளை கொட்டினால் தெரு சுத்தமாகவும் பேரூர் ஊழியர்களும் சிரமம்மின்றி எடுத்து செல்வர். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை அதனால் குப்பைகள் காற்றினால் தெரு முழுவது பரவி கிடக்கிறது பார்ப்பதற்கு/ அவ்வழியில் செல்வதற்கே அசுத்தமாக காட்சியளிக்கிறது. ஆகவே பேரூர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. {{{அதிரை நியூஸ் அல்லிதருகின்ர செய்திகள் எல்லாமே டாப்புதான்}}}
    பதிவுக்கு நன்றி...
    மக்களே நீங்கள் செய்யும் சிலவிசயங்களில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் அதிர்ப்ப்தி அடைந்து இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்,
    வீட்டு வாசலுக்கு வந்து குப்பையே எடுக்குறாங்க... ம் ம் ம் ...
    மிகவும் சந்தோசமான விஷயம் தான்,
    ஆனால் எதற்கு வசூல் செய்கிர்றார்கள் என்று புரியவில்லை.....!!!
    அதிரை பேரூராட்சி நிர்வாகம் குப்பையே அள்ளுவது அவங்க வேலை இல்லையா...!!!
    என்னப்பா நடக்குது ஊருல....???
    கண்ணே தொடைக்கிரே மாதிரியே கண்ணை குத்துரங்கலப்பா............

    ReplyDelete
  9. குப்பை கூளங்களை அள்ள வேண்டிய கடமை பேரூராட்சி நிர்வாகத்தை சேர்ந்தது. அதை அள்ளுவதற்கு கட்டணமாக ரூ 500 வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ள திருமண மண்டபங்களிலும் வசூல் செய்யுமா....?. கந்தூரி நடத்தும் தர்காவிலும்,, திருவிழா நடத்தும் கோவில்களிலும் வசூல் செய்யுமா...?.

    கூளம் அள்ளும் குப்பை வண்டியையும் அதிரை மக்கள் தான் வாங்கி கொடுக்கணும். திருமண நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சியிலும் அதை அள்ளும் கட்டணத்தையும் பொதுமக்கள் தான் கொடுக்கவேண்டும் என்றால் இது தான் அதிரையை சிங்கபூராக மாற்றுவேன் என்று விட்ட சபதமோ..?

    ஏதோ திருமண வீடு மட்டும் குப்பை கூளங்களாக காட்சி அளிப்பது போலவும், அதிரையில் மற்ற இடங்கள் எல்லாம் குப்பை கூளங்கள் அற்ற பகுதிகளாக காட்சி அளிப்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

    அதிரையில் வெளியாகும் அத்தனை இணையத்தையும் ஒரு தடவை சென்று பார்வை இட்டால் தெரியும், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பையை...! அதிரை பேரூராட்சியின் லட்சம் எந்த அளவிற்கு சுகாதாரத்தை பேணி வருகின்றார்கள் என்று தெரியும். முதலில் அதை சுத்தம் செய்யுங்கள்..! பின் முடிவு செய்யலாம் மற்ற குப்பைளை...!

    இன்று இதற்கு வசூல் என்று இறங்கிவிட்டால் பின் அடுத்தடுத்து எல்லா அடிப்படை வசதிகளுக்கும் வசூல் செய்ய பேரூராட்சி நிர்வாகம் இறங்கிவிடும். ஆதலால் இதை உடன் தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  10. நல்ல திட்டம் விடாமல் தொடர்ந்து செய்யவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.