.

Pages

Friday, August 16, 2013

அதிரை நியூஸின் அமெரிக்கா வாசகர் M.M.S. சிராஜ் அவர்களின் மனந்திறந்த மடல் !


அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )

அதிரை நியூஸின் சமீபத்திய பதிவுகளில் குறிப்பாக நோன்பு 1 முதல் பெருநாள் வரை நான் படித்தது - பார்த்தது - பகிர்ந்ததை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.

நோன்பு 1 முதல் பெருநாள் வரை நான் படித்தது எல்லா பள்ளிவாசல்களிலும் கஞ்சி வினியோகத்தின் அருமையான புகைப்படங்கள், அதிரையில் உள்ள எல்லா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சிகள், அதிரையில் வாழும் மாற்று திறனாளிகள்,காது கேளாதோர் ,வாய் பேச முடியாதோர்  இப்தார் நிகழ்ச்சி ,வெளி நாடுகளில் வாழும் அதிரையர்கள் கலந்து கொண்ட அணைத்து  இப்தார் நிகழ்ச்சிகள்,  அதிரையில் நிகழ்ந்த எஸ்.ஆர்.எம். பஸ் மற்றும் ஆட்டோ விபத்து நெஞ்சை நிலை குலைய வைத்த சம்பவம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்ற காரணத்தால் பொறியியல் கல்லுரி மாணவர்கள் சாலை மறியல் ,பெருநாள் பிறை கண்டவுடன் அதிரையில் உள்ள எல்ல பள்ளிவாசலையும் மின்விலக்குகளுடன்  கூடிய புகைப்படங்கள், அதிரையின் முக்கிய பகுதிகளை  புகைப்படங்கள் எடுத்துக் காட்டிய விதம் மித அருமை ,எங்களை போன்ற வெளிநாடுகளில் வாழும் அதிரையருக்கு உள்ளுரில் இருப்பது  போன்று ஒரு பிரம்மையை ஏற்படுத்தியது. மேலும் அதிரையில் வாழும் அணைத்து முஹல்லாவாசிகள் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள், திடல் தொழுகை திரண்ட மக்கள் புகைப்படங்கள், முத்துபேட்டை இருதரப்பு மோதல் , உலக நாடுகளில் வாழும் அதிரையர்கள் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள், அதிரை சுட்டி குழத்தைகளின்  பெருநாள் குதூகல கொண்டாட்டம் , அதிரையில் வாழும் மாற்று திறனாளிகள்,காது கேளதூர் ,வாய் பேச முடியாதோர் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள், அதிரை செக்கடி மேடு நண்பர்கள் பெருநாள் மந்தி புகைப்படங்கள் ஆகியவற்றைக்கண்டு படித்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை எனது நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து வந்தேன்.

அனைத்து தரப்பு செய்திகளையும் குறிப்பாக மரண அறிவிப்புகள் உள்ளிட்ட ஏனைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் நடுநிலையோடு முதன்மையாக பதிந்துவருவது அனைவரையும் கவர்ந்தது போல் என்னையும் கவர்ந்தது. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சமூகம் சார்ந்த உங்களின் நற்பணிகள் தொய்வில்லாமல் தொடர வேண்டும்...

தினமும் தங்கள் வலைதளத்தை பலமுறை கிளிக் செய்ய வைத்தது. எங்களை போல் உள்ளோரை தங்கள் வலைத்தளத்தில் மூலம் எழுத வைத்த பெருமை தாங்களுக்கு உண்டு என்பதில் ஐயம் இல்லை. உங்களின் பணி என்றென்றும் தொடர்வதோடு மட்டுமல்லாமல் நமதூர் இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற என் அவாவையும் இங்கே பதிவு செய்கிறேன்.

உங்களின் புதுப்புது முயற்சிகள் வெற்றியடைய அதிரை நியூஸ் குழுவினர்க்கு என் வாழ்த்துக்கள். ஒற்றுமையுடன் ஒன்றுபடுவோம் - அதிரையின் முன்னேற்றத்திற்காக இன்ஷாஅல்லாஹ் !

இப்படிக்கு,
M. M. S. சிராஜ் - கலிபோர்னியா.

9 comments:

  1. I Really Accept this comment and continue your good job for adirai and No words to thanks to adirai news and congratulation Always

    ReplyDelete
  2. I Really Accept this comment and continue your good job for adirai and No words to thanks to adirai news and congratulation Always

    ReplyDelete
  3. உண்மையிலும் உண்மை இரண்டு நாட்கள் கேபிள் அறுந்து அதிரை நியூஸ் இன் கலர் புல் படங்குலண்டன் எந்த செய்தியும் இல்லாமல் தவித்த எங்களுக்கு தலைமை நிர்வாகியின் அறிவிப்பு கூட எங்களை போன்ற வெளி நாட்டில் வசிப்போருக்கு ஆறுதல் நியூஸ் ஆக அதிரை நியூஸ் தந்தது இரண்டு வறுடன்களாக சுதந்திர தின நிகழ்சிகளை அந்த மூவர்ண கொடியை அதிரை நியூஸ் இன் கலர் புல் புகைபடத்தில் பார்ப்பதில் நாங்களும் இந்தியாவில் சுந்தர தினத்தை கொண்டாடிய உணர்வை எங்களை போன்ற வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு அதிரை நியூஸ் பெற்றுதந்தில் பேரு மகிழ்ச்சி அடைந்து அதிரை நியூஸ் இன் சமூக பனி தொடர வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  4. அன்புச் சகோதரர் M.M.S.சிராஜ் அவர்களுக்கு.,

    எங்களது அதிரை நியூஸ் வலைதளச்சமூகப்பணியை மனமுவந்து பாராட்டியதோடு மட்டுமல்லாது மின் அஞ்சலில் பதிவை அனுப்பி வைத்து தாங்களின் பதிவாய் வெளியிடுமாறு கேட்டு தாங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருந்தீர்கள். தாங்களுக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

    இது மேலும் எங்கள் குழுவினரை உற்ச்சாக மூட்டும் வண்ணம் கிடைத்த புது உந்தல் சக்தியாகும்.! தொடர்ந்து எங்களது பணி சிறந்தோங்க அனைத்து வாசகர்களின் அன்பான ஆதரவை என்றும் எதிர் பார்க்கிறோம்.

    இப்படிக்கு என்றும் அன்புடன் அதிரை நியூஸ் தலைமை நிர்வாக குழுவினர்

    ReplyDelete
  5. அதிரை நியூஸ் ...

    அதிரை நிகழ்வுகளை ....

    உடனுக்குடன் ...பேதமின்றி ..செய்தி தரும் அதிரை நியூசின்

    தொன்று தொடர வாழ்த்துக்களும் ..ஒத்துழைப்புகளும் ..

    என்றென்றும் தொடரும் ...

    ReplyDelete
  6. மனந்திறந்து எழுதிய நண்பன் சிராஜ்ஜின் மடல் அதிரை நியூஸ் குழுவினருக்கு மகிழ்ச்சியையும் கூடுதல் பொறுப்புடன் கவனமாக செயல்பட அவர்களுக்கு உதவும்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி சகோ. சிராஜ்,

    நல்ல விமர்சனம் எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதோடு மட்டுமல்லாமல் மிகுந்த கவனத்துடன் பொறுப்பாக செயல்பட உதவும்.

    ReplyDelete
  8. மனந்திறந்து எழுதிய சிராஜ்ஜின்[kaka} மடல் அதிரை நியூஸ் குழுவினருக்கு மகிழ்ச்சியையும் கூடுதல் பொறுப்புடன் கவனமாக செயல்பட அவர்களுக்கு உதவும்.by adirai west yaseen

    ReplyDelete
  9. மனந்திறந்து எழுதிய சிராஜ் காகா மடல் அதிரை நியூஸ் குழுவினருக்கு மகிழ்ச்சியையும் கூடுதல் பொறுப்புடன் கவனமாக செயல்பட அவர்களுக்கு உதவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.