.

Pages

Monday, August 19, 2013

அதிரை அருகே ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான எதிரொலி ! சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

அதிரை அருகில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் சத்தியபாமா [வயது 45 ] மற்றும் அவரின் மகள்வழி பேத்தி அட்சயா [ வயது 3 ] ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலத்த காயமடைந்த மற்றொரு பேத்தி ஈஸ்வரி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரச்சொல்லி அதிரை பேருந்து நிலையம் மற்றும் கருங்குளம் ஈசிஆர் சாலையில் கருங்குளத்தை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கோட்டாட்சியார் முருகேஷன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், காவல்துறை ஆய்வாளர்கள் செங்கமலக்கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.