.

Pages

Sunday, August 25, 2013

கழிவுகளை அள்ளுவதற்காக அதிரை பேரூராட்சிக்கு இரு வாகனங்களை வழங்கிய TIYA அமைப்பினர் !

அதிரை பேரூராட்சி உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டுகளில் உள்ள திறந்த வெளியில் அமைந்திருக்கும் கழிவு நீர் வாய்க்கால்களில் அடைத்துக்கொண்டு இருக்கும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்பபடுத்தியவுடன் கழிவுகள் உலரும் வரை வாய்க்கால் அருகே குமித்து வைத்துவிட்டு திரும்ப அப்பகுதிக்கு வரும் போது அவற்றை குப்பை வண்டிகளில் அள்ளிச்செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில் குமிந்து காணப்படும் கழிவுகளை அள்ளுவதற்கு இயலாமல் போய்விட்டாலோ அல்லது மறந்துவிட்டாலோ அவைகள் மீண்டும் அதே வாய்க்காலில் விழுந்துவிடும். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கு இரு வேலைகளாக அமைந்துவிடுவது மட்டுமல்லாமல் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கும் சூழல் அமைந்துவிடுகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு TIYA அமைப்பினர் 16 மற்றும் 17 ஆகிய வார்டுகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10,000/- மதிப்பீட்டில் கழிவுகளை அள்ளுவதற்கென்று பிரோத்தியமாக தயாரிக்கப்பட்ட இரு வாகனங்களை அதிரை பேரூராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் பணி நேற்று முதல் ஆரம்பமாகியது. 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் அவர்கள் உடனிருந்து கவனித்துவந்தார்.


2 comments:

  1. மிகச்சிறந்த பணியை 16 மற்றும் 17 மெம்பர்கள் செய்துள்ளார்கள். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல காரியம். இதை மற்ற வார்டு மெம்பர்களும் செய்தல் சிறப்பாக இருக்குமே?.

    ReplyDelete
  2. வரவேற்க்கப்படவேண்டிய விஷயம்.

    TIYA-வின் பொதுச் சேவை பாராட்டப்பட வேண்டியவை.

    16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுபின் கடின உழைப்பும் பாராட்டப்பட வேண்டியவை.

    அந்தந்த வார்டு மெம்பர்கள் அவரவர் வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள குறை பாடுகளை கவனித்துக் கொண்டாலே போதும்.ஊர் சுத்தமாகி விடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.