பெரிய ஜும்மாப் பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடிப் பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] ஜும்மாப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 8 மணிக்கும், பிலால் நகர் மற்றும் அல் அமீன் பள்ளியில் காலை 8.30 மணிக்கும், தக்வா பள்ளியில் காலை 9.00 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொழுகைக்கு முன்னர் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் பெருநாள் காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெறும் எனவும், அன்றைய தினம் மழையாக இருந்தால் லவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் நோன்பு பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயலில் காலை சரியாக 7:45 மணிக்கு நடத்துவதாக இருந்தது. அதிரையில் தொடர்ந்து கன மழை பெய்துவருவதால் ஏ.எல் மெட்ரிக் பள்ளியில்[ AL SCHOOL ] சரியாக 8 மணிக்கு தொழுகையை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [ நன்றி : அதிரை போஸ்ட் ]
பெருநாள் அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும் மின்னொளியில் களைகட்டியது. வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சுவிட் கடைகள் உள்ளிட்டவற்றில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன.
நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணபபடுகின்றன. அதிரை மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
அதிரை நியூஸ் குழு

அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇனிய நேன்பு பெருந்நாள் வாழ்த்துக்ள்
இப்படிக்கு. K idrisahamed
அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய நேன்பு பெருந்நாள் வாழ்த்துக்ள்
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete