.

Pages

Thursday, August 22, 2013

அதிரையை அசத்திவரும் மந்தி விருந்து !

மந்தி !?  தமிழ் போற்றும் நல்லுலகம் கூறிடும் இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் முதல் பரிணாமம் என்று  [ அறிவியல் படி] இதை இஸ்லாம் மறுக்கின்றது என்பது வேறு விஷயம்.  அராபியர்களிடம் கூறினால் நாக்கை சுழற்றி சப்புக்கொட்டுவார்கள்.
ஆம் ! இது ஓர் உணவுவகை ருசிமிக்க உணவுவகை மந்தியின் தாவல் போல் அரபுலகத்தில் இருந்து அதிரையை நோக்கி ஒரே தாவலாய் நம்மவர்களிடத்திலும்...

இது பற்றி செய்முறை, ருசியில் பெருமைகள் தெரியலாயிற்று மேலை நாட்டவரின் உணவு பழக்கங்களில் பிசாவும், பர்கரும் அராபியருக்கு அன்றாட உணவு பழக்கங்களில் அத்யாவசியமாகி விட்டது அவர்களின் மந்தியும் கப்சாவும் கபாபும் சவர்மாவும் நம்மவர்களுக்கு பிடித்துவிட்டது.

ஒரு நாட்டு உணவு பழக்கங்கள் வேறு நாட்டவருக்கு அறவே பிடிக்காமல் போகும் சில பிடித்ததோடு மட்டுமில்லாது அத்யாவசிய  உணவாகிவிடும் உதாரணம் சொன்னால் சீனர்களின் உணவு பழக்கம் காரசாரமாக சாப்பிடும் இந்தியருக்கு பிடிக்காது ஆனால் நூடுல்ஸ், வெஜ் சூப்புகள் நம்மில் அன்றாட பழக்கத்தில் ஒட்டிக்கொண்டது.
         
பதமாய் ஆட்டுக்கறியை வேகவைத்து கறியின் சாற்றில் பாஸ்மதி அரிசியை வேகவைத்து இரண்டையும் இரண்டற கலந்தால் மந்தி தயார் இதற்கு பிரியாணிக்கு தேவையான ஐட்டங்கள் நிறைய இதற்கு தேவைப்படாது அசிடிட்டி, அல்சர் தொந்தரவு உள்ளோர்க்கு பிரியாணியை ஹராமாக்கி இருப்பார் அவர் குடும்ப டாக்டர்கள் மந்தியை ஒருநாள் சமைத்து அந்த டாக்டரிடம் உண்ணக் கொடுத்து நீங்கள் சாப்பிடுவதற்கு அனுமதி கிடைக்கும் என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை காரணம் அதில் இஞ்சி, பூண்டு, கரம் மசாலாக்கள் மற்றும் எண்ணையின் அளவும் குறைவுதான்.
           
மந்திக்கு முக்கியம் நல்ல அரிசி, பெரிய துண்டுகள் கொண்ட ஆட்டுக்கறி, பொறுமையான சமையல்காரர். பெரிய துண்டுகள் கொண்ட கறியாக இருப்பதால் மூன்று,அல்லது நான்கு பேர்கள் அமர்ந்து சாப்பிடும் [சஹன் ] பெரிய தட்டுகள் வேண்டும். இதுவே சுன்னத் பேணுவதற்கு வழிவகுக்கின்றது, சாப்பிட்டபின் எழும்புத்துண்டுகளை வெளியில் அப்படியே போட்டு விடாதீர்கள் அதை புதைத்து விடுங்கள் தவறினால், நீங்கள் அஸருக்கு பின் செரிமான கோளாறில் சிரமப்பட சமையல்காரர் காரணம் இல்லை என்பதை நான் உறுதியளிப்பேன்.  சாப்பிட்டவர்களில் கலை நயமிக்கவர்கள் நான்கு பேர் ஒன்று கூடி குவிக் பிக்ஸ் உதவிகொண்டு எஞ்சிய எழும்புகளை ஒன்று சேர்த்து ஒரு முண்டமில்லா ஆட்டின் எழும்பு கூட்டை மியுசியத்திற்கு தயாரித்து விடலாம் ! இது ஒரு அதிசியமா ? என கேட்கும் அந்த[ மியூசிய ] அதிகாரியிடம் நான் கூறும் விஷயத்தை ஓர் பதாகையில் எழுதி அந்த எழும்புக் கூட்டோடு சேர்த்து சமர்பியுங்கள் விஷயம் இதுதான் "இந்த எழும்புக் கூடு நாங்கள் சமைத்து தின்ற ஆட்டின் எஞ்சிய பகுதி" என்று அதிசியத்துப்போவார்கள் காண்போர்கள் அனைவரும்

அதிரையில் கல்யாணம் முடிந்த இரண்டாம் நாள், பெருநாள் முடிந்த மறுநாள் இச்சிறப்புமிக்க உணவுகள் சமைக்கப்படுகின்றது.

மு.செ.மு. சபீர் அஹமது      

13 comments:

  1. ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாக இதுபோன்ற விருந்து உபசரிப்புகள் அடிக்கடி நமதூரில் நிகழ வேண்டும்.

    அழகிய ஆக்கம் ! மந்திசோறு சாப்பிட்ட திருப்தி :)

    ReplyDelete
    Replies
    1. இது ஒன்றும் ஒற்றுமையை பலப்படும் விசயமில்லை.இது போன்ற ஆடம்பர விருந்துக்கு செலவளிப்போர் 10 ஏழைக்கு உணவளிக்கலாமே,

      ஸஹீஹுல் புகாரி 4889. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!' என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, '(இவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!' என்று கூறினார். அதற்கு அவர் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை' என்று பதிலளித்தார். அவர், '(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்' என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் 'வியப்படைந்தான்' அல்லது (மம்ழ்ச்சியால்) 'சிரித்துக்கொண்டான்' என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்.'. எனும் (திருக்குர்ஆன் 59:9 வது) வசனத்தை அருளினான்.8
      Volume:5,Book:65

      Delete
    2. // இது ஒன்றும் ஒற்றுமையை பலப்படும் விசயமில்லை.இது போன்ற ஆடம்பர விருந்துக்கு செலவளிப்போர் 10 ஏழைக்கு உணவளிக்கலாமே,//

      ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் விருந்துக்கு அழைக்கப்பட்டால் நிச்சயம் ஒற்றுமை பலப்படும் என்ற ஐயமில்லை மாறாக நகரில் நடைபெறும் பெரும்பாலான திருமண வலிமா விருந்துகளுக்கு பணக்காரர்கள் மாத்திரமே அழைக்கப்படுவது வேதனைக்குரியதே.மேலும் நான் அறிந்த வரையில் ஏழைகள் வாழும் பகுதிகளுக்கு சென்று விருந்துக்கு வாருங்கள் என்று யாரும் அழைக்கப்படுவதில்லை.

      பாகுபாடற்ற விருந்து உபசரிப்புகள் நகரில் அடிக்கடி நிகழ்ந்தால் ஒற்றுமை பலப்படுத்த உதவும்.

      Delete
  2. ஒரு வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லாத மக்கள்
    நம் சமுதாயத்தில் நிறைய பேர் இருக்க இது போன்ற ஆடம்பர விருந்து தேவையா இதற்கு நிச்சயமகா இறைவைவனிடம் பதில் கூற வேண்டும்

    ReplyDelete
  3. பகட்டுக்காகவும் ஆடம்பர செயல்களே இது போன்ற விருந்து.கண்டிக்க வேண்டியதை கட்டுரையாக பதிவிட்டால் சரியாகி விடும்மா? ஒரு கவளம் சோறுக்காக எத்துணையோ பேர் காத்திருக்க ஆட்டு கறி துண்டை பெரிசா போடுனும்னு,, குறிப்பு வேறு? இது பெருமையின் உச்சகட்ட வெளிபாடு,அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.வரம்பு மீறாதீர்கள்.
    Sura:2, Ayah:215
    يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

    2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”.
    ------------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete
  4. // பகட்டுக்காகவும் ஆடம்பர செயல்களே இது போன்ற விருந்து.கண்டிக்க வேண்டியதை கட்டுரையாக பதிவிட்டால் சரியாகி விடும்மா?//

    அஸ்ஸலாமு அழைக்கும்

    சகோ. இம்ரான் கரீம்

    பலவகை உணவுகளில் ஒன்றாகிய மந்தி என்றழைக்கப்படும் பிரியாணியின் சிறப்பபைபற்றி கட்டுரையாக வடிக்கப்பட்டு தளத்தில் பதியப்பட்டுள்ளன.

    ஆடம்பரம் - பகட்டு - பந்தா ஆகியவற்றிற்காகவும், ஏழைகள் ஓரங்கட்டப்பட்டும் ஒருவர் விருந்தை ஏற்பாடு செய்வார்களானால், அவை தவறானவை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை.

    ReplyDelete
  5. அதிரை நிருபரில் வெளிவந்த மந்தி எனும் வீண் விரயம் கட்டுரை
    http://adirainirubar.blogspot.ae/2013/08/blog-post_11.html?m=1

    ReplyDelete
  6. சகோ:இம்ரான் கரீம் தங்களுக்கு ஆசிரியராகிய எனது பதில்; மந்தி பந்தி விரிகப்படுவதின் பெருமை பற்றி இங்கு கட்டுறை எழுதப்படவில்லை மந்தி எனும் ஒரு வகை உணவு பற்றி தான் இங்கு எழுதப்பட்டுள்ளது தாங்கள் மந்தி உணவுக்கு எதிரானவரா அல்லது மந்தியின் பந்திக்கு எதிரானவரா

    ReplyDelete
  7. பார்க்க, படிக்க, ரொம்ப டேஸ்ட்!

    ReplyDelete
  8. மு.செ.மு. சபீர் அஹமது : \\தாங்கள் மந்தி உணவுக்கு எதிரானவரா அல்லது மந்தியின் பந்திக்கு எதிரானவரா//

    இந்த மாதிரியான கேள்விகளை தவிர்க்க வேண்டுமே தவிர குதர்க்கமான கேள்வி கூடாதவை

    சகோ. இம்ரான் கரீம் குறிப்பிடும் (\\.இது போன்ற ஆடம்பர விருந்துக்கு செலவளிப்போர் 10 ஏழைக்கு உணவளிக்கலாமே,//) அவர் மந்தியை பற்றி சொல்ல வரவில்லை இதுபோன்ற வீண் விரயம் தேவையற்றது என்று தானே சொல்லியுள்ளார்.

    மேலும் பசியான ஏழைகள்,ஏழை குமர்களுக்கு திருமண உதவி, மற்றும் மருத்துவ உதவிகளை செய்தால் பெரும் உதவியாக இருக்கும்.

    முன்பு சகோதரர் மன்சூர் காக்கா கூறியது போல மாற்று மதத்தின் அன்பர்களை சந்தித்து இது போன்று விருந்து உபசரித்து நாம் சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே...சிந்தியுங்கள் சகோதரர்களே!


    ReplyDelete
  9. இப்ராஹீம் அன்சாரிகாக்கா சொல்வ்துபோல்
    தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் பெரிய பெரிய டாக்டர்களிடம் சிகிச்சைக்காக முன் பதிவு செய்பவர்கள் உடைய எண்ணிக்கையின் சதவீதத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.

    உதாரணமாக தஞ்சாவூர் டாக்டர் மூர்த்தியிடம் ஒரு நாளைக்கு முப்பது டோக்கன் என்று வைத்துக் கொண்டால் அதில் இருபதுக்கு மேல முஸ்லிம்களின் பெயர்கள். இதே நிலைதான் எல்லா டாக்டர்களிடமும் அதாவது முஸ்லிம்களில் அறுபது சதவீதத்துக்கு மேல இனிப்பு, ஹைபர் டென்சன், கொலஸ்ட்ரால் , தைராயிடு, மூட்டு வலி போன்ற வியாதிகளால் அவதிப் படுகிறார்கள்.

    நம்முடைய மக்கள் தொகையோ பனிரெண்டு சதவீதமே . ஆனால் வியாதியஸ்தர்கள் டாக்டர்களின் டோக்கன் லிஸ்டின்படி அறுபது சதவீதம். தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டையில் பத்தை கைலியும் பொட்டி பீஸ் தாவணியும் துவைத்துக் காயப் போட்டு இல்லாத கிளிநிக்குகளை பார்ப்பது அபூர்வம். புர்கா போட்ட பெண்களின் கூட்டமும் குதிரை மார்க் கைலி கட்டியவர்களின் கூட்டமும் மாலை வேளைகளில் சாத்துக்குடிப் பைகளைத் தூக்கிக் கொண்டு கிளிநிக்குகளில் நிரம்பி வழிகின்றன.

    நம்மில் பலர் வியாதியச்தர்களாக இருக்கிறோம். இப்படி எல்லாம் போட்டோ போட்டு உசுப்பெத்தினால் இந்தக் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். அந்த வட்டிலப்பத்தைப் பார்க்கும் போது உச்சகட்ட ஆபத்தில் இருக்கும் எனக்கே விழுந்து சுழற்ற வேண்டும்போல இருக்கிறது.

    நமது உணவுப் பழக்க வழக்கங்களே நம்மை வியாதியஸ்தர்களாக ஆக்குவதில் முதலிடம் வகிக்கின்றன. ஏற்கனவே இருக்கும் எக்கச்சக்க கொழுப்பு உணவுகளுடன் இப்போது முழுக்க முழுக்க 100% கொழுப்புள்ள உணவுதான் மந்தி திருப்பூர் சபீர் சொல்வதுபோன்று இந்த சாப்பாட்டை டாக்ட்ரிடம் காட்டினால் நல்லா சாப்பிடுங்கோ என்றுதான் சொல்வார்கள், அப்படி சொல்லாவிட்டால் அவர்கள் வருமானம் கெட்டுப்போய்விடுமே
    கெடுவது அவன் உடம்பா
    இந்த பகட்டு வாழ்க்கை தேவையா
    மாறுவோமா? அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோமா?

    ReplyDelete
  10. அவரவர் தன் நோக்கிற்கு ஏற்ப இக்கட்டுரைக்கு கருத்து எழுதுகிறார்கள். நல்லது.

    எல்லா விருந்துமே அதிக சுவை. டாக்டரிடம் அடிக்கடி செல்வது இன்னும் கெடுதல். மந்தி உணவுதான் கெடுதல் என்பதோ என்று எடுத்துக்கொள்வதும் அன்று.பழங்களை சாப்பிட்டால் நோய் வராது. அல்லாஹ்வும் சுவர்க்க உணவு பழங்கள்தான் என்கிறான். ருசிக்காக அளவோடு சாப்பிட்டால் தப்பித்துக்கொள்ளலாம். கொஞ்சம் அதன் விளைவு இருக்கத்தான் செய்யும்.

    ஒவ்வொரு உணவு வகை அதை கட்டுரையாக எழுதுவதில் தவறுகண்டால் எப்படி உலகில் இருக்கும் விபரங்களை அறிந்துகொள்வது ? இதில் மார்க்கத்தை புகுத்தி எழுதியவர் மனதை நோகடிக்க செய்வது மட்டும் மார்க்கமா ? இது போன்று உணவுகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கமா ? வேண்டுமானால் நீங்கள் ஒரு கட்டுரை உணவு என்ற தலைப்பில் எல்லாவற்றையும் எழுதுங்கள். நல்லது கெட்டது எது என்பதை விளக்குங்கள்.

    நீங்கள் ஆடம்பர செலவு செய்யாமல் எங்கே திருமணம் மட்டுமல்ல வாழ்க்கையை நடத்துகிறீர்கள். யாரையும் குறை கூற அல்ல. நடைமுறையை எழுதிதான் ஆகவேண்டும். அவ்வாறானால் மார்க்கம் தவரிபோகின்றோம் என்றா ? மார்க்கத்தை நினைவூட்டுவது நல்லது. ஆனால் அச்செயலால் எதை சாதிக்க ? தான் அறிந்தவர் என்பதித்தவிர வேறு ஒன்றுமில்லை. செயலில் ? மார்க்கப்படிதான் நடக்கவேண்டும். எழுதியவர்கள் யாரும் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறேன் என்று உண்மைபடுத்தினால் நலம். அதற்காக தவறுகள் சரியல்ல. இங்கு கட்டுரை எழுதிய நோக்கம் எல்லாரும் டாக்டர் கிளினிக்குக்கு போகவேண்டும் என்பதர்க்காகவுமல்ல. எல்லோரும் ஆடம்பர செலவு செய்யவேண்டும் என்பதற்காகவும் அல்ல. மந்தி உணவுப் பற்றி எழுதினார் அவ்வளவுதான்.

    அக்காலத்தில் உள்ள சூல் நிலை. இன்று ஏழைக்கு உணவு அளிக்க வெள்ளிகிழமை பலர் ஏழைகளை தேடுகிறார்கள். இன்று பலர் வாழ்வை பொருளாதார வழியிலும் உயர்த்த வேண்டும். அதற்காக சிந்தனைகளை செய்து வழுகாட்டினால் நலமே.

    இதில் தயாள குணம் படைத்தவர்கள் நிறைய பேர்கள் எழுதியிருப்பது தெரிகிறது. அவர்கள் ஏழை குமர் போன்ற காரியங்களை எடுத்துக்கொண்டு இவ்வூருக்கு உதவிகள் செய்தால் நலமே. மாறாக உலகில் நடப்பவைகளை அறிந்துகொள்ளும்படி செயல்படுத்துவதை நோகடிக்கவேண்டாம். இல்லையேல் செய்திகள் போட அவர்கள் திணறுவார்கள்.

    நாம் யாவரும் சுதந்திரமாக சிந்திப்பவர்கள். அதனால் யார் மனதும் நோக எழுதவில்லை சிந்தனைகளை கிளரிவிடத்தான் இது எழுத நேர்ந்தது.

    ReplyDelete
  11. மவ்லூது ஓதி சாப்பாடு கொடுப்பதை விட நன்பர்களை அழைத்து மந்தி சாப்பிடுவது மேல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.