.

Pages

Sunday, August 4, 2013

துபாயில் வேட்டி அணிந்து சென்ற இந்தியருக்கு மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு !

வேட்டி அணிந்து சென்ற இந்தியரை மெட்ரோ ரெயிலில் பயணிக்க விடாமல் துபாய் போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வசிக்கும் 67 வயது முதியவர் தனது மகளுடன் அங்குள்ள எடிசலாட் மெட்ரோ ரெயில் நிலையம் சென்றார்.

பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்/

இதைப்போன்ற உடைகளுடன் ரெயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், அந்த முதியவரையும் அவரின் மகளையும் வெளியேற்றத் தொடங்கினார்.

வேட்டி எங்களின் பாரம்பரிய உடை. இதே உடையுடன் எனது தந்தை பலமுறை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளார் என்று அவரது மகள் மதுமிதா விளக்கிக் கூறியும் காதில் வாங்க மறுத்த அந்த போலீஸ்காரர் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து துபாய் மெட்ரோ ரெயில்வே இயக்குனர் ரமதான் அப்துல்லா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கு எவ்வகை ஆடை கட்டுப்பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. உடலை மறைக்கும் மரியாதையான ஆடையுடன் யார் வேண்டுமானாலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யலாம்.

தற்போது நடந்துள்ள சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலீஸ்காரர் வேட்டியுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியது அவரது தனிப்பட்ட மனநிலையைதான் காட்டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

நன்றி : மாலை மலர்
Photo Credit : Gulf N
ews

3 comments:

  1. அடுத்து மஞ்சப்பையை தூக்கிட்டு இங்கே வரக்கூடாது :) என்று சட்டம் போட்டாலும் போடுவாணுங்க

    ReplyDelete
  2. ஐயஹோ துபாயின் வேதனையான கலாச்சாரம்...அரை குறை ஆடைக்கு அனுமதியாம் அதனை கண்டுகளிக்க...முழுவதுமாக மறைத்து வந்த நபருக்கு அனுமதி மறுப்பாம்...

    ரமதான் அப்துல்லாஹ் அவர்களின் கண்டனம் வரவேற்கத்தக்கது

    இதே ஒரு ஆங்கிலேயன் கைலி அணிந்து வந்தால் உடனே கை குலுக்கி பாராட்டுவார் அந்த போலீஸ்காரர்...

    இந்த அற்ப உலகம் ஒரு நாடக மேடை..

    ReplyDelete
  3. சொம்பு தூக்கிகள் உலகமெங்கும் இருக்காங்க என்பதுக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.

    இதே மெட்ரோவில் என் நண்பர் தன் வயதான வாப்பாவை கலர் கைலியுடன் கூட்டிக்கொண்டுவந்தவரிடம் அங்கிருந்த காவல் அதிகாரி நண்பனுக்கு தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்துக்கூறினார். அந்த வாழ்த்து வயதான தன் தகப்பனை இவ்வளவு கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்ததற்காக...

    இப்படியும் சிலபேர் இருக்கதான் செய்றாங்க..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.