.

Pages

Tuesday, July 1, 2014

11 மாடி கட்டிட விபத்து: மீட்புப் பணியில் தமுமுக !

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்ததில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணி நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில் சிக்கியவர்களை தமிழக தீயணைப்பு படை, மெட்ரோ ரயில் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன் தமுமுகவின் 5 ஆம்புலன்ஸ்களுடன் காஞ்சி (வடக்கு) மாவட்ட தமுமுகவினர் 50 பேர் இணைந்து மீட்புப் பணி செய்து வருகின்றனர்.

மாவட்டச் செயலாளர் சலீம்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ. இப்ராஹிம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கௌஸ் பாஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் எஸ். தமீம் அன்சாரி உட்பட 50 தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் : அபுல் ஹசன் சாதுலி




9 comments:

  1. யாரை தண்டிப்பது? ஏரி என தெரிந்தும் பத்திரபதிவு செய்தவர் களையா?
    இல்லை, ஒழுங்காய் இடத்தை பார்க்காமல் பணத்தை மட்டும் பார்த்து வாங்கிக்கொண்ட சி.எம்.டி.எ அதிகாரிகளையா?

    இல்லை, ஒரு பழைய ஏரியில் எப்படி கட்டிடம் கட்டுவது என தெரியாமல் பிளான் போட்டுகொடுத்த அரை குறை பொறியாளர் களையா?

    இல்லை, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தர குறைவான கம்பி, சிமெண்ட் கொடுத்தவர்களையா??

    இல்லை, அப்படி தரமான சிமெண்ட் கம்பியை வெளியில் விற்று தர குறைவான கம்பியை வைத்து கட்டிடம் கட்டிய மேஷ்திரியா? இதையெல்லாம் தாண்டி குறைந்த விலைக்கு வீட்டிற்கு ஆசைப்பட்ட மக்களையா? எங்கும் எதிலும் நேர்மையின்மை தலைவிரித்து ஆடுகிறது நம் நாட்டில். இந்த லட்சணத்தில் யாரை தண்டிப்பது? யாரை குறை சொல்லுவது?

    பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!

    TMKK பணி பாராட்டக்குரியது

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!
    த மு மு க. பணி பாராட்டுக்குரியது

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!
    த மு மு க. பணி பாராட்டுக்குரியது

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  4. மக்கள் திருந்தாதவரை, ம்ஹும், காலமுழுக்க என்னபண்ணுறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.