இதுகுறித்து சேக்கனா நிஜாமை தொடர்பு கொண்டு விசாரித்ததில்...
'எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இணையத்தோடு தொடர்புடைய ஒரு சிலர் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு எனது பெயரில் நான் பயன்படுத்திவரும் புரபைல் படத்துடன் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்கியிருக்கின்றனர். நேற்றும் இன்றும் அதிரை நியூசில் பதிவிடும் ஒவ்வொரு செய்திகளுக்கும் எனது பெயரில் தமிழிங்கிலிஸ்ல் டைப் செய்யப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.
போலியாக எனது ( சேக்கனா நிஜாம் ) பெயரில் பதிந்த பின்னூட்டங்களை கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்க்கவும் :
http://www.adirainews.net/2014/06/blog-post_8109.html
http://www.adirainews.net/2014/06/blog-post_6229.html
http://www.adirainews.net/2014/07/11.html
மேலும் எனது பெயரில் போலியாக முகநூல் ( Sakkana Nijam ) கணக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எனது முகநூல் பக்கத்தில் ( Shakkana M. Nijam ) எனது நண்பர்கள் அறிய வேண்டும் என்பதற்காக "சமூகத்தில் தற்போது சைபர்குற்றம் அதிகரித்து வருகிற வேலையில் நன்கு அறிமுகமானவரின் பெயரில் போலியான முகநூல் ( Facebook ) துவங்கி அதில் தவறான தகவல்கள் தெரிவித்து வருவது அதிகரித்து வருகிறது. இதில் என்னையும் அவர்கள் ( போலிகள் ) விட்டுவைக்கவில்லை" என்று ஸ்டேட்ஸ்ம் பதிந்துள்ளேன்.
புனித ரமலான் மாதத்தில் இது போன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் நயவஞ்சக ஆசாமிகள் உண்மையான இஸ்லாமியனாக இருக்கமுடியாது. ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இவர்களை போன்ற போலிகளிடம் எனது நண்பர்கள் - சகோதரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் விலகி இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துகொள்ள இயலாது என்பதால், போலிகளிடமிருந்து அதிரை நியூஸுக்கு விடுத்த பகிரங்க மிரட்டலாக கருதவேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் எந்தவொரு ஆஷாமிகளும் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும், அதேபோல் எந்தவொரு இணையதளங்களும், சமூக அக்கறை கொண்ட நபர்களும் இதனால் பாதிப்படைய கூடாது என்பதற்காகவும் இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் காவல்துறையில் ஏன் புகார் அளிக்ககூடாது ? என கடந்த இரு நாட்களாக அதிரை நியூஸ் குழுவின் சார்பில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து அதிரை நியூஸ் வாசகர்களுக்கு விரைவில் தெரிவிக்கிறோம்.
உலகெங்கிலும் உள்ள அதிரை நியூஸ் வாசகர்களின் தொடர் ஆதரவிற்கும் - ஒத்துழைப்பிற்கும் மிக்க நன்றி !
குழப்பம் விளைவிக்காதவர்க்கே சொர்க்கம் எச்சரிக்கை!
ReplyDeleteபூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
அல்குர்ஆன்-28:83
Venai vaippavan
Deletevenaiyaruppan
adirainews valarchche thagkatha
vakkera puththe eudaiyavarkalen
மீடியா என்பது மக்களுக்காக தானே தவிர மற்றவரின் மனதை புண்படுத்த அல்ல,அப்படி தான் மேற்குயிந்திய ஊடகம் இதை தான் செய்கிறது.நம் சமுகத்தை தீவீரவாதி என முத்திரை குத்தியதும் இந்த மீடியா தான்.இரு சமூகத்திற்கும் இடையே விரோத்தை வளர்ப்பதும் இந்த மேற்குயிந்திய மீடியா தான் இதே போன்று உள்ளூர் மீடியாவையும் ஆக்க நினைக்கிறாகள் இந்த போலிகள்.
ReplyDeleteசேகன்னா ஜி
ReplyDeleteகவலை வேண்டாம்
நீங்க அதிரைக்கு கிடைத்த பொக்கிஷம். அதிரை நியூஸ் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட வெறியர்கள் செய்யும் வேலை இது.
சமீபத்தில் போலிப் பெயர்களில் வரும் பின்னுட்டங்கள் அதிகரித்துவிட்டன.
ReplyDeleteநண்பர் சேக்கனா நிஜாம் அவர்கள் பெயரில் அவசியமற்றவகையில் பின்னூட்டமிட்டு மிரட்டல் விட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தரும் செயல், எந்த அளவுக்கு நண்பர் நிஜாம் வேதனை அடைந்திருப்பாரோ அதே அளவுக்கு நானும் வேதனை அடைந்துள்ளேன்.
ஏனென்றால் இதே நிலை சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் வந்தது. என் பெயரிலும் சிலர் பின்னூட்டமிட்டு எனக்கு நெருக்கடி தந்தனர். இதனால் வரும் மன உளைச்சலை நானும் அறிந்தவன்.
பொதுவாழ்வில், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செயல்படும் ஊடக ஆர்வலர் சேக்கனா நிஜாமுக்கு இதுபோன்று பல நெருக்கடிகளை சிலர் தந்துள்ளதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
இந்த வேளையில் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
Dear Brother,
ReplyDeleteCyberCrimeComplaints.com gives you a platform to post your cyber crime related complaints and in the following website you can find cyber crime complaint cells in various country.
If you want to file a cyber crime complaint, please visit to http://cybercrimecomplaints.com/
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சஹர் ரமழான் முபாரக்.
ஆசிரியர்கள் பலர் இருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும், அதே நேரத்தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இணையதளத்தை உருவாக்கி பல விஷயங்களை வெளி உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் பல ஆசிரியர்கள் அவர்களோடு இணையதளங்களும் இன்று நம் மத்தியில் ஏராளம், அவர்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும்.
போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது, போட்டி என்று வந்து விட்டால் கண்ணியமான முறையில் இருக்கணும், அதுதான் மரியாதையும் சகோதரத்துவமும்கூட.
இங்கு சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்கள் இரண்டு இணையதளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர் ஆவார். அவர் பெயரில் போலியான இ-மெயில் மற்றும் முகநூல் இவைகளை திறந்து அதில் அவருக்கு எதிராக வாசகங்களை எழுதி அவருக்கே அனுப்பி மிரட்டும் சில சகோதரர்கள் இருப்பதை நினைத்தால்! என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஒரு சமயம் சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்கள் உங்களுக்கு துரோகம் ஏதும் செய்துருந்தால் அவரிடமே நேரிடையாக கேட்கலாமே, அப்படி கேட்க உங்களுக்கு முழு உரிமை இருகின்றதே, உரிமை இருக்கும்போது இப்படி பின் பக்கம் குத்துவது எந்த வகையில் நியாயம்?
“இனி உனக்கு ஆப்பு” இந்த வாக்கியத்துக்கு எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம். இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளலாம்.
சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு, இந்த விஷயம் உங்களை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கும் என்று என்னால் உணர முடியும், காரணம் 2012களில் எனக்கு விரோதமான முறையில் ஒரு சிலர் பின்னூட்டம் இட்டத்தை என்னால் மறக்க முடியாது.
எதுவாக இருந்தாலும் இவர்களை இதோடு மன்னித்து விடுங்கள், மீண்டும் இப்படி நடக்குமேயானால்! கவலை வேண்டாம், அவர்களை யார் யார் என்று அடையாளம் காண்பது வெகு சுலபம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
வன்மையாக கண்டிக்கக் கூடியது. கண்டனத்திர்க்குறிய செயல். இத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்பவன் அல்லாஹ்வுக்கு பயந்தவனாக இருக்கமாட்டான். ஒரு மூமீன் இன்னொரு மூமினுக்கு மனம் நோகும்படி நடந்து கொண்டால் பாதிக்கப் பட்ட அந்த மூமீன் மன்னிக்காதவரை அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான். மனசாட்சியில்லாத இப்படியும் சில மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteஅதிரை நியூஸின் வளர்ச்சிப் பொறாமையில் காழ்ப்புணர்வு கொண்டு சில விஷமிகள் செய்யும் கையாலாகத் தனமான செயலாகும்.
இந்தப் போக்கை வளர விடாது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.
சமுதாயத்தில் சகோ .சேக்கனா நிஜாம் அவர்கள் எண்ணற்ற விழிப்புனர்களை ஏற்படுத்துவது ஆரம்பம் முதலே சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை வலைதள உலகம் நன்கு அறியும் .இதுவிசயத்தில் கருத்து வேறுபாடுகள் களையப்படவேண்டும் ,பத்திரிகை தர்மம் பேணப்படவேண்டும் .இருப்பினும் சகோ .சேக்கனா நிஜாம் அவர்களே உங்களின் தொய்வில்லா பனி தொடரட்டும் கவலைபடவேண்டாம் .கருப்புஆடுகளை கூடிய விரைவில் கண்டறிவோம் .
ReplyDeleteஅட கேடுகெட்ட கேவலப்பட்ட நாத்த உருப்படாத புத்திகளா, நீ எல்லாம் யாருயா இப்படி மிரட்டுவது? நிஜாம் காக்கா பாட்டுக்கு அவர் பாதையில் போறாரு, அவரு என்ன நீ திங்கிற சோத்திலே மண்ணை அள்ளி போட்டாரா?
ReplyDeleteநிஜாம் காக்கா நீங்க ஒன்னும் யோசிக்காமே அவங்க மிரட்டின எல்லா செய்திகளையும் சைபர் கிரைம்முக்கு தகவல் சொல்லுங்க. பிறகு பாருங்க இவங்க துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடுவாணுக. இதை மன்னிக்கக் கூடாது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
சேகன்னா ஜிகவலை வேண்டாம்நீங்க அதிரைக்கு கிடைத்த பொக்கிஷம். அதிரை நியூஸ் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட வெறியர்கள் செய்யும் வேலை இது.
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இது மோசமாக செயல். நமது தமிழ் இணையதளங்கள் நாளுக்கு நாள் வளர்ந்துவருவது குறித்து நாம் சந்தோஷப்படணும். உங்களைப்பார்த்து மற்றவங்க திருந்தனும். தயவு செய்து சமாதானமாக இருங்கள்.
ReplyDeleteநண்பர் நிஜாம் அவர்களின் உண்மையான சேவையை புரியாத விஷமிகளின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது. இச்செயலை செய்தவர் எவராக இருந்தாலும் நிஜாம் அவர்களிடம் நேரிடையாக சென்று மன்னிப்பு கேட்காதவரை இந்த புன்னிய மாதத்தில் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
ReplyDeleteநிஜாம் காக்கா நீங்க ஒன்னும் யோசிக்காமே அவங்க மிரட்டின எல்லா செய்திகளையும் சைபர் கிரைம்முக்கு தகவல் சொல்லுங்க. பிறகு பாருங்க இவங்க துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடுவாணுக. இதை மன்னிக்கக் கூடாது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்.
ReplyDeleteNizam kaka don't worry Allah support u always forget that stupid guys continue Ur job
ஜூஜூபி மிரட்டல்களை கண்டு கொள்ள வேண்டாம், ரமலானில் இந்தப் போலிகள் உங்களுக்கு அள்ளித் தரும் இலவச நன்மைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். சீரிய பணி தொடரட்டும்.
ReplyDelete
ReplyDeleteஇது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
அன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
சகாக்களே, மிரட்டி நீங்க என்னத்த சாதிக்க போறீர்கள்? அவர்கிட்ட ஒரு செய்தித் இணையதளம் உள்ளது, உங்களுக்கு தேவைப்பாட்டால் அன்லிமிடட் தளங்களை தொறந்து வைத்துக்கொள்ளுங்கள். மிரட்டுவது பொண்னத்தனம்.
ReplyDeleteகருத்துவிட்ட அனைவரும் தங்கள் பங்குக்கு வாரு வாருன்னு வாரிவிட்டார்கள். செம அடி, இதுபோதும் மிரட்டல் காரர்களுக்கு.
சகோ. சேக்கனா நிஜாம் அவர்களுக்கு(ம்) இன்ன பிற பதிவர்களுக்கும்..
ReplyDeleteபொது வாழ்வில் எப்போது நீங்கள் குறி வைத்து மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிறீர்களோ அப்போது நீங்கள் சரியான இலக்கில் பயணிக்கிறீர்கள் என்று பொருள். தன் பெயரைக்கூட பகிரங்கப்படுத்த தயங்கும் இத்தகையவர்களின் கீழ்த்தரமான செயல் உங்கள் முயற்சிகளுக்கு எந்த பின்னடைவையும் தந்துவிடாமல் உங்கள் இலட்சியப் பயணத்தை தொடருங்கள்.
இது போன்ற காளான்களுக்கு யாரும் ஆதரவளிக்கப் போவதில்லை. தானாகவே மடிந்துவிடும்.
அதிரை எக்ஸ்பிரஸும் அது தொடங்கி மக்கள் அங்கீகாரம் அடைந்த ஆரம்ப வருடங்களில் இத்தகைய மறைமுக அச்சுறுத்தல்களுக்கும் நேரடி விமர்சனங்களுக்கும் உள்ளானது.
எதிர்ப்பு வரும்போது மேலும் முனைப்புடன் பணியாற்றுவதே போராளிகளின் இலக்கணம்.
இணையதாள வாசகர்களும் இதர பதிவர்களும் இச்செயலுக்கான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். அதுவே நிஜாம் போன்ற தன்னார்வலர்களுக்கு ஊக்கமாக அமையும்.
"The world suffering more not by the nuisance of the BAD people, but the silence of the GOOD people"
ஊருலே இருக்குற பிஸி வேலைக்கிடையேயும் தன்னாரவத்தில் பங்கு கொண்டு உடனுக்குடன் அப்டேட் செய்யும் உன் நல்ல எண்ணம் என்றும் வரவேற்கப்படவேண்டியது. வெளிநாடு வாழ் மக்களுக்கு உன் தளம் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு மிரட்டலும் உன் முன்னேற்றத்தின் படிக்கட்டு, உன் சேவை நம்மூருக்கு தேவை மாப்ளே..
ReplyDelete