இவர் கடந்த [ 18-06-2014 ] அன்று சென்னை தலைமை செயலகத்தில் செயல்படும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கை மனுவை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்க அதில் கேட்டுகொண்டிருந்தார்.
இவருடைய முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து கும்பகோணம் மண்டலத்தில் செயல்படும் அரசு பேருந்து கழக வர்த்தக துறையினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதாக மனுதாரருக்கு அஞ்சலில் வந்த கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காலித் அஹமது நம்மிடம் கூறுகையில்...
'நமதூரில் நாள் ஒன்றுக்கு ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளே சென்னைக்கும் - நமதூருக்கும் வந்து செல்கின்ற்ன. இதில் கட்டணம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் நடுத்தர வர்க்கத்தினர் - ஏழைகள் சென்னைக்கு பயணம் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு நமதூருக்கு சென்னையிலிருந்து வந்து செல்லும் அரசு பேரூந்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகள் தற்போது போதுமானதாக இல்லை என்பதால், இந்த இருக்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை அனுப்பினேன். எனது முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் எனது கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சம்பந்தபட்ட துறையினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
தற்போதைய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுகின்ற வகையிலும், யார் வேண்டுமானாலும் கோரிக்கையை இலகுவாக எடுத்துச்செல்ல முடியும் என்ற நல்லதொரு வழிகாட்டியை ஏற்படுத்தி கொடுத்த சகோதரர் காலித் அஹமது அவர்களின் இந்த சமூகப் பணியை பாராட்டி 'அதிரை நியூஸ்' குழுமத்தின் சார்பாக நன்றியையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.
சரி... சரி... நாங்களும் புகார்களை எப்படி பதிவு செய்வது ? என நீங்கள் முணுமுணுப்பது எங்கள் காதில் விழத்தான் செய்கின்றன.... :)
கோரிக்கைகளை பதிவு செய்வது எப்படி ? என்பதை பார்ப்போம்
முதலமைச்சரின் தனிப்பிரிவு என்றால் என்ன ?
ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப ப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
சரி எவ்வாறு நமது புகார் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்வது ?
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளத்தில் [ http://cmcell.tn.gov.in/ ] புகார் அல்லது கோரிக்கைகளை பதிவு செய்வதற்கு நமக்கு தேவையானது, மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் [ http://cmcell.tn.gov.in/register.php ] சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்ப்ளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட்டும் உடனே நம்முடைய மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும். அது போக, கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும்.
இந்த முகவரியில் [ http://cmcell.tn.gov.in/login.php ] உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று டிராக் செய்யவும் முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை துரிதமாக அந்தந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகிறது.
கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு எழுதலாம்...
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
அதிரை நியூஸ் குழு
உங்களின் சிறந்த சமூகப்பணிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களைப்போல் பல நூறு காலித் அஹமது நமதூருக்கு தேவை. அப்போதுதான் நகரம் வளர்ச்சி பெறும்...
தற்போதைய மக்கள் விழிப்புணர்வை பெற்று வருவது காலத்தின் கட்டாயம்.