.

Pages

Sunday, November 30, 2014

அதிரை பேரூராட்சியின் துப்புரவு மேற்பார்வையாளராக நாடிமுத்து பொறுப்பு ஏற்பு !

அதிரை பேரூராட்சியின் துப்புரவு மேற்பார்வையாளராக நடராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் திருபுவனம் பேரூராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பேரூராட்சியில் காலியாக இருந்த துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு மதுக்கூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வந்த பேராவூரணியை சேர்ந்த நாடிமுத்து பதவியேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற இவருக்கு பேரூராட்சி தலைவர் - துணை தலைவர், செயல் அலுவலர் - ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தின் நாய்கள் கருத்தடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை!

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் பின்புறத்தில் தமிழக அரசின் 2013-14 நிதி ஒதிக்கீட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் கருத்தடை கட்டிடம் கட்டப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு இடத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மற்றொன்று நன்னிலம் பேரூராட்சியில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித் திறியும் நாய்களை இங்கு கொண்டு வரப்பட்டு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு இனப்பெருக்கத்தடை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தவே இந்த கட்டிடம் செயல்படும். ஆனால் கட்டி பல மாதங்களாகியும் இன்னும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பதால் தற்பொழுது முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் குடோனாகவும,; பேரூராட்சிக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காகவும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு வசதிகள் வீணாகி நாளடைவில் பயன்பெறாமல் போகும் நிலையில் மாறி வருகிறது. இந்த திட்டத்திற்காக அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருந்தும் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? இந்த பணிக்கு யார் நியமிக்கப்படுவார்? இது யாரோட கட்டுப்பாட்டில் செயல்படும்? என்ற கேள்விகளுக்கு பதில் பெற முடியாத நிலையில் உள்ளது. தற்பொழுது முத்துப்பேட்டையில் சமீபக்காலமாக அளவுக்கு அதிமான ஆயிரக்கணக்கான நாய்கள் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுருத்தி சுற்றி வருகிறது. மேலும் இந்த நாய்கள் ஆடு மாடு போன்ற கால் நடைகளை தினந்தோறும் கணக்கிட முடியாத அளவுக்கு கொன்று திண்று வருகிறது. அது மட்டுமின்றி பலரையும் துரத்தி கடித்து வரும் இந்த நர்யகளால் பொதுமக்கள் தெருக்களில் நடப்பதற்கு கூட தயங்கி வரும் நிலமையில்; தள்ளப்பட்டு உள்ளனர். சுற்றி திரியும் இந்த நாய்களை பிடித்து அப்புற படுத்த வேண்டும் என்றும், திறக்காமல் உள்ள இந்த கட்டிடத்தைத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முத்துப்பேட்டையில் உள்ள பொது மக்களும், சமூக அமைப்புகளும், அனைத்து கட்சியினரும் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நாய்கள் கருத்தடை கட்டிடம்.
கட்டிடத்துக்குள் பேரூராட்சியின் பிளிச்சிங் பவுடர் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் சேக்மைதீன் கூறுகையில்: நகரில் ஆயிரக்கணக்கான நாய்கள் சுற்றி திரிகிறது. பல ஆடுகளை நாய்கள் கொன்று தின்று வருகிறது. இதனால் பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றார்.

மனித நேய மக்கள் கட்சியின் முன்னால் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் கூறுகையில்: 
நாய்களின் அச்சுறுத்தல் ஒரு பக்கம் உள்ளது. இந்த கட்டிடத்தை தேவையில்லாமல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கட்டி இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகமே முடக்கி வைத்திருப்பது வேதனைக்குரிய விஷயம். இதனை செயல் படுத்தினாலே நகரில் நாய்களின் எண்ணிக்கை குறையும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்: 
நாய் கருத்தடை கட்டிடத்தை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தவறினால் நிர்வாகிகளுடன் கலந்து பேசி மிகபெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

அதிரையில் TNTJ நடத்தும் இரத்த தானம் முகாமில் இளைஞர்கள் பங்கேற்பு !

தஞ்சை காலி இரத்த வங்கியுடன் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையினர் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் இன்று [ 30-11-2014 ] காலை 10 மணி முதல் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்று வருகின்றது.

இம்முகாமில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், மருத்துவர் சேக் அலி, பல் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான், தமிழக தவ்ஹீத் ஜாமத்தின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர்.

கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, எஸ்.பி பக்கீர் முஹம்மது, மீரா, எம்.ஐ அப்துல் ஜப்பார், இரத்ததான பொறுப்பாளர் ஹாஜி முஹம்மது, ஏ.கே.எஸ் நவாஸ், எம்.கே.எம் ஜமால் முஹம்மது, தமீம் அன்சாரி, சுலைமான், தமீம் அன்சாரி, ராஜிக் முஹம்மது, ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் தஞ்சை காலி இரத்த வங்கி மருத்துவ குழுவினருடன் இணைந்து இரத்த கொடையாளருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். முகாம் தொடர்ந்து மதியம் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
இப்ராஹீம் அலி

கேமிரா கண்காணிப்பில் அதிரை பேருந்து நிலையம் ! [ படங்கள் இணைப்பு ]

திருட்டை தடுக்கவும், சந்தேக நபர்களின் நடமாட்டம், வாகன நெருக்கடி, வாகன விபத்து, சமூக விரோத செயல் உள்ளிட்டவற்றை கேமராக்கள் வைத்து கண்காணிக்க மாவட்ட காவல்துறையின் சார்பில் திட்டமிடப்பட்டது.

அதன்படி அதிரையின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகிய பேருந்து நிலையத்தின் மத்திய பகுதி, பேருந்துகள் வரும் வாயில் பகுதி ஆகியவற்றில் மூன்று கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அதிரை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் நேரடி கண்காணிப்பில் இருந்துவருகிறது. மேலும் அதிரையின் பிரதான வேறு சில இடங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்று காலை அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட்டார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் கேமிரா இயங்கும் தன்மை குறித்தும், இதனால் ஏற்படும் பயன் குறித்தும் விவரித்து கூறுகிறார்.

மண் வளத்தை பாதுகாக்க - நீர் ஆதாரத்தை பெருக்க அதிரையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் மண் வளத்தைப் பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தைப் பெருக்கவும் சிறப்பான முறையில் திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளத்தினை பெருக்கும் நோக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் மரம் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மரம் நடும் திட்டத்தை இன்று காலை அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அரசு மருத்துவனையின் மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் சேனா மூனா ஹாஜா முகைதீன், அப்துல் லத்திப், சிவக்குமார், அபூதாஹிர், முத்துக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

சென்னையில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ரேடியோ தாவாவில் நேரடி ஒலிப்பரப்பு !

சென்னை  மண்ணடி மஃமூர் பள்ளியில் இன்று காலை காலை 9:00 மனி முதல் இரவு 10:00 மனி வரை  நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் நேரடி ஒலிப்பரப்பை உங்கள் ரேடியோ தாஃவா ( http://www.radiodawah.org/ ) ல் கேட்டு பயன்பெறலாம்.

நிகழ்ச்சி குறித்து மஸ்ஜீத் மாமூர் கமிட்டி மற்றும் ஷரீயத் பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:




அதிரையில் 13.6 மி.மீ மழை !

அதிரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிரையில் பெய்த மழையளவு 13.6 மில்லி மிட்டர் என கணக்கீடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் இதர பகுதிகள் பட்டுக்கோட்டை 44, வல்லம் 41, வெட்டிக்காடு 36.6, பேராவூரணி 35, மஞ்சலாறு 34.6, நெய்வாசல் தென்பாதி 33.4, அணைக்கரை 32, மதுக்கூர் 31.4, திருவிடைமருதூர் 28.5, தஞ்சாவூர் 28, குருங்குளம் 27, அய்யம்பேட்டை 26, திருவையாறு 25.2, பூதலூர், கும்பகோணம் தலா 25, ஈச்சன்விடுதி 24.4, பாபநாசம் 24, திருக்காட்டுப்பள்ளி 21.4, கல்லணை 20, ஒரத்தநாடு 18.6 மழை பெய்துள்ளது. 

Saturday, November 29, 2014

அதிரை ஜாவியாவில் நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸில் காயல்பட்டினம் குழுவினர் பங்கேற்பு !

ஆண்டுதோறும் அதிரை ஜாவியாவில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்று வரும். நாற்பது தினங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் தினமும் காலை நேரங்களில் புஹாரி ஷரீஃப் வாசிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவும், துஆ கேட்கப்படும். மஜ்லிஸில் தினமும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வரும்.

இந்நிலையில் இன்று மாலை அதிரை ஜாவியாவில் சிறப்பு மஜ்லீஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்த 17 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் கலந்துகொண்டனர். இதில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.

அதிரையின் ஒவ்வொரு பகுதியின் நிலத்தின் அரசு மதிப்பீடு எவ்வளவு ?

நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் நிலத்தின் ஆவணங்களை பதிவு செய்வது உண்டு. நிலத்தை வாங்குவோர் அரசு நிர்ணயித்துள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி [ Guideline Values ] முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் செலுத்த வேண்டும்.

தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1– ந் தேதி முதல் தமிழகமெங்கும் காணப்படும் நிலத்தின் வழிகாட்டும் மதிப்பீடு திருத்தி அமைக்கப்பட்டு புதிய வழிகாட்டி மதிப்பீடு வெளியிடப்பட்டது. இதில் நமதூரின் ஒவ்வொரு பகுதியின் அரசு நிர்ணயித்துள்ள மதிப்பீடு கட்டணம் எவ்வளவு நாம் செலுத்தி வருகிறோம் என்பதை காண்போம்.

தெருவின் பெயர் -
வழிகாட்டி மதிப்பீடு(  )

AALADI STREET 250/Sq.Ft
AATHI THIRAVIDAR STREET 200/Sq.Ft
AMAS NAGAR 200/Sq.Ft
ARUMUGA KITTANGI STREET 200/Sq.Ft
ATHAM NAGAR 100/Sq.Ft
ATHAM NAGAR EXTENSION 100/Sq.Ft
CHETTY STREET 500/Sq.Ft
CHETTY THOPPU 500/Sq.Ft
CHEZHIAN KULUM KEEL KARAI 250/Sq.Ft
CHEZHIAN KULUM VADA KARAI 250/Sq.Ft
CHEZHIANKULUM THEN KARAI 250/Sq.Ft
CHINNA NESAVUKARA STREET 250/Sq.Ft
ELANGO NAGAR(NARASINGAPURAM) 50/Sq.Ft
FATHIMA NAGAR 100/Sq.Ft
HAJA NAGAR 150/Sq.Ft
HAJIYARLINE 200/Sq.Ft
HAZARATH SHEIK ALAUDEEN OLIYULLAH NAGAR 150/Sq.Ft
HOSPITAL ROAD 500/Sq.Ft
IFRAHIM NAGAR 100/Sq.Ft
KADARKARAI STREET 250/Sq.Ft
KALIYAR STREET 150/Sq.Ft
KARAIYUR STREET @ MARIAMMAN KOVIL STREET 250/Sq.Ft
KEELASTREET 200/Sq.Ft
KEERAIKARA STREET 150/Sq.Ft
KOLIYAR STREET @ VALLIAMMAI NAGAR 100/Sq.Ft
M.A.H.NAGAR 200/Sq.Ft
M.S.M.GARDEN 50/ Sq.Ft
MADUKKUR ROAD 200/Sq.Ft
MANNAPPANKULUM MEL KARAI 300/Sq.Ft
MARAIKAYAR LINE 300/Sq.Ft
MELA STREET MELAKKEEL PURAM 150/Sq.Ft
MELANEIYAKARA STREET @ PERIYA NESAVU STREET 250/Sq.Ft
MELASTREET MELATHEN PURAM KEEL PAKKAM 200/Sq.Ft
MELASTREET MELATHENPURAM MELPAKKAM 200/Sq.Ft
MELASTREET MELAVADAPURAM 200/Sq.Ft
NADU STREET KEEL PURAM @ METTU STREET 300/Sq.Ft
NADUTHERUMEL PURAM 300/Sq.Ft
PALANCHETTI STREET @ SUBRAMANIYAR KOVIL STREET 500/Sq.Ft
PALANCHETTI STREET KEEL PAKKAM 200/Sq.Ft
PANIPOONDAR NAGAR 150/Sq.Ft
PARIYARI STREET 100/Sq.Ft
PATTUKKOTTAI ROAD 300/Sq.Ft
PERUMAL KOVIL STREET 250/Sq.Ft
PILLAIMAR STREET @ ANNA NAGAR 200/Sq.Ft
PILLAIYARKOVIL STREET 200/Sq.Ft
PUDU KADAI STREET @ KEERAI KADAI STREET 300/Sq.Ft
PUDU STREET THEN PURAM 300/Sq.Ft
PUDU STREET VADA PURAM 300/Sq.Ft
PUDUMANAI STREET 500/Sq.Ft
PUDUNEIYAKKARA STREET@ PUDUKUDI NESAVU STREET 100/Sq.Ft
SALAMATH NAGAR 100/Sq.Ft
SALT LINE 200/Sq.Ft
SALT LINE ROAD 200/Sq.Ft
SANGATHU KOLLAI 200/Sq.Ft
SAYAKKARA STREET @ THILAGAR STREET 400/Sq.Ft
SEKKADI STREET 250/Sq.Ft
SELLIAMMAN KOVIL STREET 300/Sq.Ft
SETHU ROAD THEN PURAM 400/Sq.Ft
SETHU ROAD VADA PURAM 400/Sq.Ft
SETHU ROAD VADAPURATHIL KEEL PAKKAM 400/Sq.Ft
SIVANKOVIL STREET 150/Sq.Ft
SRINIVASA NAGAR 150/Sq.Ft
SUNNAMPUKARA STREET @ KADAIYAR STREET 150/Sq.Ft
THANDALKARA STREET 150/Sq.Ft
THARAGAR STREET @ THAIKKAL STREET 300/Sq.Ft
THATCHA STREET @ NEHRUGI STREET 300/Sq.Ft
THATTARA STREET@NETHAGI STREET 300/Sq.Ft
THENRAL NAGAR 200/Sq.Ft
THOPPUKKADU 50/Sq.Ft
VADUGAR STREET @ PERIYAR STREET 200/Sq.Ft
VANDIPPETTAI 200/Sq.Ft
VANIYA STREET@ BHARATHIYAR STREET 200/Sq.Ft
VATHAIKKARA STREET@SEGU UDUMAAN STREET 200/Sq.Ft
VETRILAIKARA STREET 200/Sq.Ft

Source: http://www.tnreginet.net/

அமீரகத்தில் அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த இலியாஸ் ! [ படங்கள் இணைப்பு ]

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

நமதூரை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஓரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.

அப்படி என்ன செய்தார்!!!!!
மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 8 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அதிரை அமீன்