அறிவியல் கண்காட்சி ரெயில் தஞ்சைக்கு வந்தது. மதுக்கூர் அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரெயில் நேற்று தஞ்சை வந்தது. மக்களிடையே உயிரின பன்மயம் பற்றியும், சுற்றுச்சூழல் மாசுபடுவது பற்றியும் விளக்கும் வகையில் இந்த கண்காட்சி ரெயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் கண்காட்சி ரெயில் கடந்த 2007-ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 369 ரெயில் நிலையங்களை கடந்துள்ளது. 1,318 நாட்களில் 1 கோடியே 23 லட்சம் மக்கள் இதனை கண்டுகளித்துள்ளனர்.
இந்த ரெயில் நேற்று சேலத்தில் இருந்து தஞ்சை வந்தது. தஞ்சை ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்த ரெயில் இன்றும் (புதன்கிழமை) தஞ்சை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த ரெயில் தஞ்சைக்கு வந்துள்ளது.
இதில் 8 பெட்டிகளில் சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா மூலம் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நமது நாட்டின் உள்ள பலவகையான உயிரினங்கள் குறித்தும், மலைகள், தீபகற்பம், கடலோரபகுதி, தீவுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உயிரினங்கள் பாதுகாப்பு மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிர்கள், விவசாய உயிரின வகை மற்றும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்டவை பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மீதமுள்ள பெட்டிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானத்துறை சார்பில் தட்பவெட்ப நிலை, பல்லுயிர் வகைகள் மற்றும் தண்ணீரை பாதுகாப்பது குறித்தும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 1 பெட்டியில் எரிபொருள் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 1 பெட்டி சிறுவர்களுக்கு சோதனை செய்யும் இடமாகவும், விளையாடவும், அறிவியல் பூர்வமான கணக்கு புதிர்கள் மற்றும் அறிவியல் தொடர்பானவை இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியை பார்க்க வருபவர்கள் செல்போன், கேமரா, பைகள், தீப்பெட்டிகள், புகை பொருட்கள், புகையிலை மற்றும் சில திரவங்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மதுக்கூர் அர் -ரஹ்மான் பள்ளியிலிருந்து 5ஆம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் மட்டும் இந்த அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.இந்த இரயிலை பார்வையிட நீண்ட கியூவில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நிற்கவேண்டிய இருந்தது. மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளியின் முதல்வர் மற்றும் அறிவியல் துறை ஆசிரியைகள் மாணவர்களை அழைத்து சென்றனர்.
மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளி மாணவ மாணவிகள் உருவாக்கிய படைப்புகள்:

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.