.

Pages

Thursday, November 20, 2014

அமெரிக்கா நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவு ! [ படங்கள் இணைப்பு ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், நார்த் டகோடா, மினசோடா, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹியோ மற்றும் பென்சில்வேனியா உட்பட பல பகுதிகளில் தற்போது பனி கடுமையாக பொழிகிறது. சில இடங்களில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 13 செ.மீ அளவுக்கு பனி பொழிகிறது. நியூயார்க்கின் பவ்பலோ நகரில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குளிர் தாங்க முடியாமல் நியூயார்க் நகரில் இதுவரை 4 பேர் பலியாகிவிட்டனர்.  சில இடங்களில் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நிலைமை மிகமோசமாக இருப்பதால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணி நடக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.