.

Pages

Thursday, November 20, 2014

பணிபுரிய உலகில் சிறந்த இடமாக துபாய் தகுதி !

பணிபுரிய உலகில் சிறந்த இடமாக துபாய் நகரம் தகுதி பெற்றுள்ளது. நியூயார்க், ஹாங்காங், சிங்கப்பூர், லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய நாடுகளை பின் தள்ளிவிட்டு முதல் இடத்தை தக்க வைத்துள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் சுறுசுறுப்பான பொருளாதார‌ம், கவர்ச்சிகரம், மற்றும் தனி நபர் வாழ்க்கைதரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரான்ஸ் முன்னாள் மாணவ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலகில் 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றும் தனி தனியே மதிப்பீடு அளிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக துபாய் நகரம் முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டாமிடத்தில் நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டம், 3ம் இடத்தில் டொர்னொடொ, 4ம் இடத்தில் சிங்கப்பூர் ,5ம் இடத்தில் மாட்ரிட்,6ம் இடத்தில் ஹாங்காங், 7ம்  இடத்தில் நியுயார்க்,8ம் இடத்தில் டோக்யோ,9ம் இடத்தில் ஷாங்காய்,10ம் இடத்தில் லண்டன், 11ம் இடத்தில் பாரிஸ்,12ம் இடத்தில் மிலனோ,13ம் இடத்தில் மும்பை,14ம் இடத்தில் மாஸ்கோ,15வது இடத்தில் சா போலொ ஆகியவை இடம் பெற்றுள்ளது.

Source : Emirates247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.