.

Pages

Monday, November 24, 2014

குப்பை அள்ளி செல்லும் பேரூராட்சி வாகனம் திடீர் பழுதால் நடுரோட்டில் நிறுத்தி வைப்பு !

அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர்களும், 1 அபேய் வாகனமும் உள்ளது. இவற்றை கொண்டு அதிரை பகுதிகளில் தினமும் குமியும் குப்பைகளை அள்ளிச்சென்று ஊருக்கு அப்பால் கொட்டப்படுகிறது. குப்பை அல்லும் வாகனங்களில் அவ்வபோது ஏற்படும் திடீர் பழுதால் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் நடுத்தெருவின் பிராதான சாலையில் குப்பைகளை அள்ளிகொண்டு பேரூராட்சியின்  டிராக்டர் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் வாகனம் நகர்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியே செல்லும் வாகனங்களும், அருகில் உள்ள பெண்கள் பள்ளியிலிருந்து வகுப்பு முடிந்து வீடு செல்லும் மாணவிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் வாகன பழுதால் பேரூராட்சி ஊழியர்கள் கையாள்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் நகரில் குமியும் குப்பைகளை அள்ளிச்செல்வதற்கு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இது போன்ற பழைய வாகனங்களை அதிரை பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.