.

Pages

Monday, November 24, 2014

அமீரகத்தில் கடும் பனிப் பொழிவு ! [ படங்கள் இணைப்பு ]

துபாய் : சீதோசன நிலை மாறுதலை தொடர்ந்து யுஏஇ தலைநகர் அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  அடர்த்தியான பனியும், குளிரும் நிலவுகிறது. அபுதாபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்  காலை நேரத்திலும் மூடுபனியாக இருந்து வருகிறது. இதனால் அபுதாபியில் இருந்து அதிகாலை புறப்பட வேண்டிய 44 விமானங்கள் சுமார் 4 நேரம் தாமதமாகவும், சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கொழும்பு, தோஹா, குவைத், தம்மாம், சீசெல்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் அல் அய்ன், அல் பத்தீன் ,துபாய் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இது குறித்து எத்திஹாத் விமான நிறுவனம் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பனிகள் அடர்ந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்கும்படி காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.