.

Pages

Sunday, November 23, 2014

மழைநீரால் நிரம்பும் தருவாயில் செடியன் குளம் [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில் பொதுமக்கள் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் முழுவதும் நிறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

  1. After two years this pond filled up ... Thanks to Allah

    ReplyDelete
  2. இந்த குளத்தின் கரையோரம் (குறிப்பாக கிழக்கு பக்கம்) இயற்கை அழகு தரும் பூ மரங்களை நட்டு பராமரித்து வந்தால், அழகுக்கு அழகும், மண் அரிப்பையும் தடுத்த பலனும் கிட்டும். தற்போது நம் முன்னோர்கள் நட்ட ஒரே ஒரு மரம் மட்டும் (ஐந்தாம் கரை) பல ஆண்டுகளாக பயன் தந்து கொண்டு உள்ளது. இதே போல் மற்ற கரையோரமும் நட்டால் அது அடுத்த தலைமுறைக்கு உதவும்.

    ReplyDelete
  3. எல்லாக் குளங்களும் அதி முயற்சி எடுத்து நீர் நிரப்பப்பட்டன. ஆனால் ஏனோதானோ என்று அரசு நிர்வாகம் கைவிடப்பட்ட செடியன் குளம் மட்டும் கண்டும் காணாமல் போனதற்கு காரணம் தெரியவில்லை. இந்தக் குலத்தில்தான் அன்றிலிருந்து இன்று வரை மனிதர்கள் குளிக்கின்றனர். இறைவனே நீர் நிரப்புகிறான். சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டாததும் காரம் புரியவில்லை. பொதுப்பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. எப்படியோ செடியன் குளம் நிறைந்து மனதை நிறைவாக்கிவிட்டது. இனி இக்குளத்தை அசுத்தப் படுத்தாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.