.

Pages

Monday, November 24, 2014

பரபரப்பான விற்பனையில் மரச்சாமான்கள் !

தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் மரச்சாமான்கள் பேராவூரணியில் பரபரப்பாக விற்பனை ஆகின்றன. விலை மலிவு என்பதாலும், வீட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
       
மரச்சாமான்கள் விற்கும் தஞ்சையை சேர்ந்த வியாபாரி அமர்சிங் கூறுகையில், 
"வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, குழந்தைகளுக்கான எழுதுமேஜை, கட்டில், முக்காலி, டேபிள், டீ பாய், போட்டோ ஸ்டான்ட் போன்றவற்றை கொண்டு வந்து மலிவான விலையில் விற்பனை செய்கிறோம். எங்களிடம் முக்காலி போன்ற பொருட்கள் ரூபாய் நூறு முதல் விற்பனை செய்கிறோம். நாற்காலி ரூபாய் 200 முதல் ஐநூறு வரையிலும், மரக்கட்டில்கள் ஜோடி 2000 ரூபாய் வரையிலும் உள்ளது. ஒதியம்பலகை, மாம்பலகை, காட்டு மரங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தஞ்சை பகுதியில் தயாராகிறது. அதனை மொத்த விலைக்கு வாங்கி வந்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்கின்றோம். மரக்கடைகளில் கிடைக்கும் துண்டு மரங்கள், பலகைகள் வாங்கி மரத்தச்சர்களை கொண்டு தயாராகிறது. இதனால் விலை மலிவாக விற்பனை செய்ய முடிகிறது.
         
மரச்சாமான் வாங்கி கொண்டிருந்த நீலகண்டன் என்பவரிடம் கேட்டபோது, " எனது மகனுக்கு எழுதுமேஜை செய்து கேட்டு மரவேலை செய்பவரிடம் இரண்டு மாதமாக அலைகிறேன். செய்தபாடில்லை. இங்கு ரூபாய் 150 ல் எழுதுமேஜை வாங்கி விட்டேன். ஐம்பது ரூபாய்க்கு பெயிண்ட் வாங்கி அடித்து விட்டால் வேலை முடிந்தது. மரச்சாமான் வாங்கி, அதற்கு தச்சர் கூலி கொடுத்து கட்டுப்படியாகுமா ? " என்கிறார்.
       
பரபரப்பான விற்பனை காரணமாக மரவியாபாரிகள் உற்சாகத்திலும், மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்களும் ஆர்வத்தோடும் வாங்கி செல்கின்றனர்.

செய்தி மற்றும் படம்: 
எஸ்.ஜகுபர்அலி ,பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.