.

Pages

Sunday, November 30, 2014

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தின் நாய்கள் கருத்தடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை!

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் பின்புறத்தில் தமிழக அரசின் 2013-14 நிதி ஒதிக்கீட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் கருத்தடை கட்டிடம் கட்டப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு இடத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மற்றொன்று நன்னிலம் பேரூராட்சியில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித் திறியும் நாய்களை இங்கு கொண்டு வரப்பட்டு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு இனப்பெருக்கத்தடை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தவே இந்த கட்டிடம் செயல்படும். ஆனால் கட்டி பல மாதங்களாகியும் இன்னும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பதால் தற்பொழுது முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் குடோனாகவும,; பேரூராட்சிக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காகவும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு வசதிகள் வீணாகி நாளடைவில் பயன்பெறாமல் போகும் நிலையில் மாறி வருகிறது. இந்த திட்டத்திற்காக அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருந்தும் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? இந்த பணிக்கு யார் நியமிக்கப்படுவார்? இது யாரோட கட்டுப்பாட்டில் செயல்படும்? என்ற கேள்விகளுக்கு பதில் பெற முடியாத நிலையில் உள்ளது. தற்பொழுது முத்துப்பேட்டையில் சமீபக்காலமாக அளவுக்கு அதிமான ஆயிரக்கணக்கான நாய்கள் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுருத்தி சுற்றி வருகிறது. மேலும் இந்த நாய்கள் ஆடு மாடு போன்ற கால் நடைகளை தினந்தோறும் கணக்கிட முடியாத அளவுக்கு கொன்று திண்று வருகிறது. அது மட்டுமின்றி பலரையும் துரத்தி கடித்து வரும் இந்த நர்யகளால் பொதுமக்கள் தெருக்களில் நடப்பதற்கு கூட தயங்கி வரும் நிலமையில்; தள்ளப்பட்டு உள்ளனர். சுற்றி திரியும் இந்த நாய்களை பிடித்து அப்புற படுத்த வேண்டும் என்றும், திறக்காமல் உள்ள இந்த கட்டிடத்தைத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முத்துப்பேட்டையில் உள்ள பொது மக்களும், சமூக அமைப்புகளும், அனைத்து கட்சியினரும் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நாய்கள் கருத்தடை கட்டிடம்.
கட்டிடத்துக்குள் பேரூராட்சியின் பிளிச்சிங் பவுடர் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் சேக்மைதீன் கூறுகையில்: நகரில் ஆயிரக்கணக்கான நாய்கள் சுற்றி திரிகிறது. பல ஆடுகளை நாய்கள் கொன்று தின்று வருகிறது. இதனால் பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றார்.

மனித நேய மக்கள் கட்சியின் முன்னால் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் கூறுகையில்: 
நாய்களின் அச்சுறுத்தல் ஒரு பக்கம் உள்ளது. இந்த கட்டிடத்தை தேவையில்லாமல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கட்டி இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகமே முடக்கி வைத்திருப்பது வேதனைக்குரிய விஷயம். இதனை செயல் படுத்தினாலே நகரில் நாய்களின் எண்ணிக்கை குறையும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்: 
நாய் கருத்தடை கட்டிடத்தை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தவறினால் நிர்வாகிகளுடன் கலந்து பேசி மிகபெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.