.

Pages

Monday, November 24, 2014

பட்டுக்கோட்டை மேற்கு: திமுக ஒன்றிய செயலாளர் தேர்தலில் 'ஏனாதி' பாலு மகன் தமிழரசன் வெற்றி !

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 35 மாவட்டங்களாக இருந்த, தி.மு.க அமைப்பு நிர்வாகம், 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும் என சீரமைப்பு குழு அறிக்கை கொடுத்தது. இதன்பிறகு தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக து.செல்வம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட திமுக அமைப்பு நிர்வாகத்தை இரண்டாக தஞ்சை தெற்கு - வடக்கு என பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு திமுக தலைமையிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை ஒன்றியத்தை பட்டுக்கோட்டை மேற்கு - கிழக்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டதை அடுத்து அதிரை பகுதி பட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் இன்று [ 24-11-2014 ] காலை பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு பகுதியின் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு தமிழரசன் ( ஏனாதி பாலு மகன் ), ரமேஷ், பழனிவேல் ஆகியோரும், கிழக்கு பகுதிக்கு முருகப்பன், பார்த்திபன், வேதரெத்தினம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் மேற்கு பகுதிக்கு போட்டியிட்ட திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய முன்னாள் செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் மகன் தமிழரசன் என்கிற ராமநாதன் 39 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை காட்டிலும் எட்டு வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதனால் இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட பழனிவேல் 31 வாக்குகளும், ரமேஷ் 13 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற தமிழரசன் என்கிற ராமநாதனுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
File photo

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.