இந்நிலையில் தஞ்சை மாவட்ட திமுக அமைப்பு நிர்வாகத்தை இரண்டாக தஞ்சை தெற்கு - வடக்கு என பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு திமுக தலைமையிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை ஒன்றியத்தை பட்டுக்கோட்டை மேற்கு - கிழக்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு எதிர்வரும் [ 24-11-2014 ] அன்று ஒன்றிய செயலாளர்கள் பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிரை பகுதி பட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்கு பகுதியின் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு தமிழரசன் ( ஏனாதி பாலு மகன் ), ரமேஷ், பழனிவேல் ஆகியோரும், கிழக்கு பகுதிக்கு முருகப்பன், பார்த்திபன், வேதரெத்தினம் ஆகியோரும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் அனைவரும் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Annea
ReplyDeletemuthalelea
adirai nakara
seayalalar..........yarug....go.
rompa thala valeya erukku.