.

Pages

Thursday, November 27, 2014

முத்துப்பேட்டையில் பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது !

முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு பகுதியில் பறவைகளை வேட்டையாடுவதாக முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் தலைமையில் வன சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் அயூப்கான், வனக்காவலர்கள் கென்னடி, மாரிமுத்து, சிவநேசன், குமார், செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழு சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்பொழுது காப்புக்காடு என்ற பகுதியில் அதே கிராமம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம்(45), ராஜாகோபால்(50) ஆகியோர் வலை வைத்து பறவைகளை வேட்டையாடி பிடித்து வந்ததை கண்டுப்பிடித்தனர். உடன் அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு கூழக்கிடா, இரண்டு உள்ளான் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. கைப்பற்றப்பட்ட ஒரு கூழக்கிடா, இரண்டு உள்ளான் வனத்துறை அதிகாரிகள் ஸ்வாகா பண்ணிவிடுவார்கள் இதற்குப் பெயர் தான் நோகாமல் நொங்கு தின்கிறது .... ஹல்லோ பறவைக் காச்சல் பரவுதாம் இத கட்டுப் படுத்த அரசிடம் எதாவது திட்டம் உண்டா ? அப்படின்னா என்னான்னு கேட்பாங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.