அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவியர், பெற்றோர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.
நீர், காற்றாலை, மின்சாரம், மாற்று எரிபொருள் சக்தி, குறைந்த விலையில் நிறைந்த பலனளிக்கும் சத்துணவுகள், இயற்கை உணவுகள், மருத்துவம், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரங்குகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த முறையில் கண்காட்சி அமைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் எம்.காமாட்சி சுந்தரம், சி.மனோன்மணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.
மாணவ, மாணவியரின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அறிவியல் கண்காட்சி நடத்தி அவர்களின் திறமை மேன்படும் வகையில் மாவட்ட, மாநில, தென்னிதியளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற செய்யவேண்டும்.
ReplyDeleteஅடுத்தாண்டு 2015 ம் ஆண்டுக்கான, ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம்பெற வாழ்த்துக்கள்.