.

Pages

Monday, November 24, 2014

குலுமணாலி பனி மழையில் உலாவிய காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

AIFUCTO சார்பில் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்கலைகழக மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட கருத்தரங்க நிகழ்ச்சி சண்டிகரில் எஸ்டி கல்லூரியில் கடந்த நவம்பர் 14 முதல் 16 வரை ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 'தரமான உயர் கல்வி கற்பதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டன.

இதில் கலந்துகொள்வதற்காக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள் ஏ. முஹம்மது மொய்தீன், எம். முஹம்மது மொய்தீன், என். முஹம்மது மொய்தீன், சொக்கலிங்கம், என். ஜெயவீரன், மேஜர் எஸ்பி கணபதி, எஸ். ராஜா முஹம்மது, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், எஸ். அப்பாஸ், கே. செய்யது அஹ்மது கபீர், பிரேம் நவாஸ், சேகர், ரமேஷ், சேக் அப்துல் காதர், பழனிவேல், பேராசிரியை பரிதா பேகம், ஜெய்னபா பேகம், சுமதி மற்றும் அலுவலக பணியாளர்கள் ரவி, விஜயகுமார், ஹாரூன் ஆகியோர் சண்டிகர் சென்றனர். இதில் கிடைத்த இடைப்பட்ட கால அவகாசத்தில் அருகில் உள்ள சுற்றுலா தலமாகிய குலுமணாலி, பஞ்சாப் பல்கலைகழகம், முகாலி, ஆக்ரா, சிம்லா, அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.

இதில் குலுமணாலி கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத் தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு மலைப்பாதை ஸ்தலத்திலிருந்து மயிர்க்கூச்செரிய வைக்கும் எழில் காட்சிகளையும், பனிச்சிகரங்களையும், மலைகளையும் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. அழகில் அதிரை அறிவுகள் மின்ன
    நிழலில் நினைவில் நெகிழ்ந்தோம் - பழகும்
    வழக்கில் அமைதி வகுத்தே நிலவும்
    அழகே அரங்கிலே ஆற்று

    ReplyDelete
  2. ஆஹா என்ன ஒரு அற்புதம், வாழ்த்துகள்...

    நூலக புத்தகங்கள் பனியில் விளையாடுகின்றார்களே !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.