.

Pages

Wednesday, November 19, 2014

மின்னல் வேகத்தில் பைக்கில் சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் தலை துண்டாகி பலி !

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வீரமணி (25). பிஇ பட்டதாரியான இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணி செய்து வந்தார். இவரும் இவரது நண்பர்கள் 5 பேரும் தி.நகரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். சூப்பர் மார்கெட்டை தினமும் காலையில் திறப்பது வீரமணியின் வழக்கம்.அதன்படி, இன்று காலை வீரமணி தனது நண்பர் ராஜ்குமார் (25) என்பவருடன் பைக்கில் மயிலாப்பூர் நோக்கி புறப்பட்டார். மின்னல் வேகத்தில் அவரது பைக் சென்றது. கதீட்ரல் சாலை, பின்னி சாலை சந்திப்பு அருகே செல்லும்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், வீரமணி தலை சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி துண்டானது.

ராஜ் குமார் கால் ஒடிந்து கதறி அழுதார். ரத்த வெள்ளத்தில் வாலிபர்கள் கிடப்பதை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் ரவி குமரன், எஸ்ஐ சோபியா ஆகியோர் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், சம்பவ இடத்திலே பலியான வீரமணி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “வாலிபர்கள் அதிவேகத்தில் பைக்கை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
File Photo

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.