.

Pages

Tuesday, November 18, 2014

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது ! டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) சிறப்பு கட்டுரை !

2014, நவம்பர் மாதம், கொச்சிக் கடற்கரையிலும், புது டெல்லியிலும் 'லவ் கிஸ்' என்ற அமைப்பு ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நேசத்தினைத்தினை பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்று விட்டது ஒரு செய்திக் குறிப்பு. அதுவும் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணும் ஓரின சேர்க்கையினை வெளிப்படுத்தும் அளவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சிதான் உச்சகட்டம். ஏனென்றால் அறையில் நடக்க வேண்டிய செயல்கள் அந்தரத்திற்கு வந்து விட்ட அதிசயம் தான்.

சிறார்கள் உணவுப் பழக்க வழக்கங்களால் சமீப காலங்களில் இளம் வயதிலேயே பாலுணர்வு உச்சக் கட்டத்தினை எட்டும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதன் வடிகாலாய்’ லவ்’ என்ற ஒரு ஆயிதத்தினை கையில் எடுக்கின்றனர்.  பாலுணர்வு ஆராச்சியாளர் டாக்டர் நாராயண ரெட்டி கூறும்போது, 'பாலுணர்வு தவறல்ல, ஆனால் அவற்றினை அறிவுடன் கட்டுப் படுத்துவது புத்திசாலித் தனம்' என்று சொல்கிறார். சமீபகால சினிமாவும்,
டிவியும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பாடல்களையும், தொடர்களையும், படங்களையும் வெளியிடுவதால், அதனை பெரியோரும், சிறார்கள் ஒருங்கே அமர்ந்து வீடுகளில், தியேட்டர்  போன்றவற்றில் அமர்ந்து பார்த்து ரசிப்பதால் பாலுனர்வினை மேலும் தூண்டுவதிற்கு வழி விடுகிறோம். பீச், தியேட்டர், பூங்கா, போன்ற பொது இடங்களில் சிறார்கள் தங்கள் பள்ளி, கல்லூரி சீருடையினைக் கூட மாற்றாமல் மெய்மறந்து அமர்ந்து லவ்வினைப் பரிமாறிக் கொள்வதினை நீங்களும் கண்டு மனம் வெதும்பி இருப்பீர்கள். பார்வை, சிரிப்பு, கடித பரிமாற்றம்,பரிசு அன்பளிப்பு என்றுத் தொடங்கி உரசுதல், அணைத்தல், முத்தமிடல், பின்பு பெண் சிறார்கள் தங்களையே உடல் ரீதியாக 'தியாகம்' செய்யுதல் என்று எல்லை மீறிப் போகும். அதால் பாதிக்கப் படுவது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும், அவர்களுடைய மான, மரியாதையும் தான். அதில் பாதிக்கப் பட்டவர்கள், 'கௌரவக் கொலை'என்ற ஆயுதத்தினைக் கடைசியாக கையாள்கின்றனர். அவையெல்லாம், 'கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம்' என்பது போன்ற செயலாகும்.

சிறார்கள் பாலுணர்விற்கு அடிமையாவதிற்கு என்ன முக்கியமான காரணம்:
1) குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை சிறார்களை பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க வழிவிடுகிறது.பெற்றோர்கள் சிறார்களில் பராமரிப்பிளிருந்தும், வழி நடத்துவதிலிருந்தும் கவனம் செலுத்தாதது சிறார்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வளர்கிறார்கள். சில வீடுகளில் பெற்றோர்களின் ‘கூடா ஒழுக்கம்’ குழந்தைகளை வழிக்கேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.

வளரும் சிறார்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய பாலுணர்விற்கு அடிமையாகி விட்டு வாழ்க்கையினை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் பெற்றோர், உற்றார், உறவினர் மிகக் குறைவே. சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் வரும் செயல்முறைகள் அலங்காரமானது மட்டுமல்ல மாறாக அபாயகரமான பொய்யானது, பாதுகாப்பற்றது  என்று சிறார்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் உதாரணமாக 10.11.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னை கொடுங்கையூரில் வினோத் என்ற 28 வயது வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிள்  மெக்கானிக். அவர் வித்யா(27) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து நான்குமாத கர்ப்பிணியாக்கி உள்ளார். அதன் பின்பு காதல் மனைவி மீது உள்ள பாசம் விலகி, அருகில் உள்ள பள்ளி சிறுமிகள் பக்கம் பார்வையினை செலுத்தியிருக்கின்றார். அவர் வலையில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நக்மா, 'காதல்' படத்தில் வரும் கதாயகி போன்று  விழுந்திருக்கின்றார். இருவரும் பொழுது போக்கு இடங்களில்  சுற்றியிருக்கின்றார்கள். இதனை அறிந்த நக்மாவின் பெற்றோர் நக்மாவினை சொந்த ஊரான டெராடூனுக்கு   அழைத்துச் சென்று இருக்கின்றார்கள். இதனை அறிந்த வினோத்தும்  டெராடூனுக்குச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் சென்னையில் திருமணம் செய்ய ஜி.டி. ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார். வினோத் டெராடூனுக்குச் சென்றதினை அறிந்து மனைவி வித்யா சென்னை சென்ரல் ரயில் நிலயத்தில் உறவினர்களுடன் காத்து அந்த இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளார். போலீசாரும் நக்மாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வர வழைத்துள்ளார்கள் என்ற செய்தி எவ்வளவு சிறார்கள் பாலுணர்வுக்குப் பழியாகி விடுகிறார்கள் என்று தெரிந்திருக்கும்.

2) சுய மரியாதை, கவுரவம் இல்லாமை: 
சுய மரியாதை மற்றும் கவுரவம் இல்லாத சிறார்கள், பெண்கள் மனோ இச்சைகளுக்கு காட்டுப் பட வேண்டியதுள்ளது. குழந்தைகள் வளரும் போதே வேற்று ஆடவர் கொடுக்கும் இனிப்புப் பண்டங்கள், அன்பளிப்பு போன்றவைகளை இலவசமாகப் பெறக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் சிறார்கள் பெரியவர்களாக வளரும்போது வேற்று ஆடவர் கொடுக்கும் செல்போன், பாக்கெட் மணி, பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்க மாட்டர்கள். அவ்வாறு சுய கவுரவுத்துடன் வளர்க்கப் பட்ட பெண் சிறார்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது பாலுணர்வுக்கு உந்தப் பட்டு தங்களது கற்பினை இழக்க மாட்டார்கள் என்றும், சுய கவுரவமில்லாது இருக்கும் பெண் சிறார்கள் தங்கள் கற்பினையும் இழந்து பால் வினை நோய்களையும் பெற்றுக் கொள்கிறார்கள் என்று டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறார். அது மட்டுமா, காதலன் பெண் சிறார்களின் கற்பினை சூறையாடி கரு உண்டாக்கி விட்டு அதனைக் கலைக்க யோசனைகளான கடுகுச்சாறு குடித்தல், கள்ளிப் பாலை பெண் உறுப்பில் செலுத்துதல், ஹேர்பின் மற்றும் குத்தூசி கொண்டு கற்பபையினை குத்துடல், போலி டாக்டர் உதவியுடன் கொடூரமான முறையில் கருக்கலைப்பது போன்ற கொடூரமான யோசனைகளுக்கும் அவர்களை வற்புறுத்துகிறான். அந்த விசப் பரிட்சையில் பெண் சிறார்கள் உயிர் இழக்கவும் நேருடுகிறது  உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரு பூவினில் தேனெடுத்து சுவை கண்ட காதலன்  தன் காதலியினைப் பார்த்து, 'நீ திருமணத்திற்கு முன்பு என்னுடன்  உறவு கொண்டது போல வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருப்பாய்' என்று சந்தேகமும் காதலியினை விட்டு ஒதுங்கும் பேர்வழிகளைப் கண்டுள்ளோம்.

3) நேசமும், பாசமும்:
காதலர்கள் காதலியின் உடல் உறவிற்காக நேசத்துடன் பழகுவர். ஆனால் காதலிகள் பாசத்திற்காக உடல் உறவினை ஒப்புக் கொள்கிறார்கள். என்று 1999 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இயங்கும், 'பவுண்டேசன் ஒப் ரிசர்ச் அண்ட் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரியும், நிர்மலா மூர்த்தி மற்றும் அகிலா வாசன் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள், 'பெண்கள் ஆண்களின் மேல் உள்ள பாசத்தினை  'பியார்,பிரேம்' என்று நவுன் ஆன பெயர் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் அதனை வினைச் சொல்லாக மாற்றி தங்களின் நேசம் வேண்டுமென்றால் அதற்கு பரிகாரமாக காதலியின் கற்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். புது டெல்லியின் ஒரு ஆய்வு அறிக்கையில், 'ஆண்களின் தோற்றத்தில் மயங்கும் பெண்கள் 57 சதவீதம்' என்று கூறுகிறது. சென்னையில் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், காதில் வலயம், கழுத்தில் கவரிங் செயின், கையில் வெள்ளி பிரேஸ்லெட், போன்று அணிந்து பெண்கள் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்ஸ் போன்ற வற்றில் வளம் வந்து தங்கள் வலையில் சிக்கும் கன்னிகள் சுற்றி  வட்டம் போடுவதினை நீங்கள் காணலாம். அதுபோன்ற வல்லூருகளிடமிருந்து பெண் சிறார்களை கண்மணியினை காக்கும் இமைகளைப் போல் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

4) ஆணாதிக்கம்: 
காதலில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. ஒரு ஆய்வுக் கட்டுரையில், 'பெண்கள் சுகமில்லாது இருந்தாலும் ஆண் காதலர்கள் உடலுறவு கொள்ள வற்புறுத்தலுக்குப் பணிவதாக' சொல்கிறது. அதே அறிக்கையில் ஆண்கள் காதலிகளிடம் உடலுறவு கொள்ளும்போது தற்காப்பிற்கான ஆணுறைகளை 75 சதவீதம் பேர்கள் தவிர்ப்பதாக கூறுகிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக காதலர்களை கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?

5) உற்றார், உறவினர், ஆலோசகர் கடமை:
மும்பையினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும் பொது, 'பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கற்பமாவதிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப் படுகிறார்கள்'.

ஆகவே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் ஆலோசகர்கள் பெண் சிறார்களுக்கு பருவமடைடல், அதனால் உடலில் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள், கற்பு பிறழா ஒழுக்கம், பாலுணர்வு அதனை பாதுகாக்கும் விதம் ஆகியவற்றினை தன் நண்பர்களுக்கு சொல்லும் புத்திமதி போல் எடுத்துச் சொல்லி, குழந்தைகள் தேவைகள் குறிப்பறிந்து ஆடம்பரமில்லா செலவினங்களுக்கு உதவி செய்து அவர்களை காதல்  என்ற மாய வலையில் விழாமல், வாழ்க்கையில் வெற்றிகாண ஒவ்வொருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும் எனச் சொல்லி நல்வழியில்,  வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வீணாகாமல் நெல்லுக்குப் பாய எப்படி வழிவகை செய்கிறோமோ அதனைப் போன்று சமூதாய மக்களும்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமல்லவா ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி / எழுத்தாளர் / சமூக ஆர்வலர்

14 comments:

  1. காலச்சூழலுக்கேற்ற சிறந்த விழிப்புணர்வு !

    துண்டு பிரசுரமாக அடித்து பொது இடங்களில் விநியோகிக்கலாம்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருந்தது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்க உதவும்.

    ReplyDelete
  3. முகநூல் வழியே 'Mohamed Ashik' கூறிய கருத்து...
    டாக்டர் A.P. முஹம்மத் அலி IPS, காவல்துறையில் சேருவதற்கு முன்னர், அதிராம்பட்டினத்தில், காதிர் முஹைதீன் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவர் என்பது பலபேருக்கு தெரியாது.

    ReplyDelete
  4. முகநூல் வழியே 'Mohamed Ashik' கூறிய கருத்து...

    // இதன் மூலம் கள்ளத்தனமாக காதலர்களை கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?//

    ----நன்றாக இருந்தது பதிவு.

    ReplyDelete
  5. Cerethth mukaththukku
    sonthakkarar.
    arumai yana pathevu
    kalla kathalar kalukku
    saatda yade.

    ReplyDelete
  6. இன்றைய நடப்புகள் நன்குத் தகுந்தவர்களால் அலசப்பட்டும், அறிவுரைகள் வழிகாட்டப்பட்டும், அனைத்து சமூகமும் சிந்திக்க வேண்டியதுமான சமூக அக்கறைக் கொதிப்பால் அவசிய தருணத்தில் மலர்ந்த சிறந்தக் கட்டுரை என்றால் மிகையாகாது.

    மனிதக் கண்டுப்பிடிப்புகளும் தக்க ஒழுங்கு முறையுடன் செயல்படுத்தப்படும் போதே அது மனிதக் குலத்திற்கு நன்மை பயக்கும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதும் இல்லை. அனுபவத்தில் ஆயிரமாயிரம் அனுதினமும் அனுபவித்துத்தான் வருகிறோம். மின்சாரம் இல்லாமல் வாழ்வு அசையாது என்று சொன்னால் மறுப்புகள் எங்கும் கிளம்பாது. ஆனால் அந்த மின்சாரத்தை எப்படிக் கையாண்டால் நலம், இல்லையேல் உயிரைக் குடித்துவிடும் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

    மின்சாரம் போல் அன்பும் அவ்வாறே, நாம் கவனமுடன் அதனை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் இது வாழ்வை நரகாக்கிவிடும் அல்லது அழித்துவிடும். கூடா நட்பும் அன்பின் நிமித்தமே ஏற்படும். அது பிறரையும் தன்னையும் அழிக்கும். உதாரணம் எழுதி பின்னோட்டம் மிகைப்பது சலிக்கும் என்பதால் விடுதல் நலமென கருதுகிறேன்.

    அன்பில்லாமல் எவ்வுயிரும் இல்லை. அவ்வன்பை இப்படித்தான் காட்ட வேண்டும் என்று அன்றே அறிஞர்கள், ஆன்மீகவாதிகள் அதி உச்சமாக அண்ணலார் வழிகாடித்தான் உள்ளனர். இப்பூவுலகில் பெண்மையும் ஆண்மையும் கடிவாளம் கலைந்தால் உலகில் மனிதம் அழியும்; மனிதஉருவில் மட்டும் நடமாடும்; வேதனை, துன்பம் பழுத்து நிறையும். அதனை நோக்கி நாகரீகம் என்ற பொய்மை இழுத்துச் செல்ல மனிதர் யார்தான் தடுக்காமல் இருப்பார். நான் கட்டுரை எழுதியவர் போன்றோரை மனிதர் என்றுக் கூறுகிறேன்.

    ReplyDelete
  7. மண்ணுக்குள் புதைத்த
    பென்பிள்ளப் போல்...
    என்னுக்குள் படிக்க
    எழுகின்றது வேதனை.

    நாகரீகம் என்று
    நல்லப் பல இருந்தாலும்
    சோகரீகம் இல்லாமல்\
    சுகங்கான முடியாதோ !

    வாகாக வந்ததை
    வசதியாக பயன்படுத்தாமல்
    போகாத முறையில்
    போகிறதே இன்பம்.

    அன்பென்று அணைக்க
    அகிலமெல்லாம் கண் திறக்க
    பண்பெல்லாம் பறக்கிறதே
    பரிதவிக்க மனிதகுலம்.

    மிருக வாழ்க்கை
    மிக வேகமாய்
    அருகில் வருகிறதோ
    அந்தோ ! பரிதாபம் !

    முத்தமிட நீ நினைத்தல்
    மோசம் போ ! எப்படியும்
    பத்தினிகள் இருக்கின்றார்
    பயமில்லை எங்களுக்கு.

    ReplyDelete
  8. சீறார்களுக்கு அறிவுரை வழங்கும் சிறப்பான கட்டுரை. நாகரீகம் வளர்ச்சியடையாத அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் மரியாதையுடனும் நாகரீகத்துடனும் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றோ நாகரீகம் நாளுக்குநாள் வளர்ந்து அநாகரீகத்தின் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

    மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை இவ்வுலக வாழ்வில் என்னென்ன செய்தோம்.? நாம் எதற்காக பிறந்தோம் இதனால் யாருக்கு என்னபயன் என்பதை ஒருநிமிடம் உணர்ந்தால் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஓரணியில் திரண்டு தனது பாதையை சரியாக்கி செம்மை படுத்திக் கொள்ளும். உணர்வது யார்..??? எப்போது...???

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.‎

    காலச் சூழலுக்கு ஏற்ற ஆக்கம், இந்த ஆக்கம் எல்லோருக்கும் ‎பொதுவானதாக இருக்கும் பட்ச்சத்தில், குடும்ப பெரியோகள் கவனத்தில் ‎கொண்டு சிறார்களுக்கு கவுன்சிலிங் முறையில் ஆலோசனைகளை வழங்கி ‎அவர்களை நேர் வழியல் கொண்டு வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, ‎ஆனாலும் பெரியோர்கள் அப்படி செய்ய முன் வர வில்லை.‎

    ஆசிரியர்கள் மத்தியில் எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்குது என்று ‎பார்த்தோமானால் அங்கேயும் சீரோவாக இருக்கின்றது.‎

    இங்கு தனி மனிதன் ஒவ்வொருவரும் தகுந்த விழிப்புணர்வு அடைய ‎வில்லையாயின், இதைவிட இன்னும் பயங்கரமான நிலைக்கு ‎தள்ளப்படுவான் என்பதில் சற்றும் கூட அய்யமில்லை.‎

    இந்த நேரத்தில் இப்படியொரு ஆக்கத்தை கொடுத்து நறுக்கென்று சொன்ன ‎
    டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) அவர்களுக்கு நன்றிகளையும் ‎வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‎

    பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  10. இதுபோன்ற முத்தம்மிடும் பின்னி என்ன சமூகத்திற்க்கு சதி செய்யும் கயவர்கை இனம் கண்டு முகத்திரையை கிழிக்கவேண்டும்

    ReplyDelete
  11. Assalamu alaikum Brothers engaged in web team of Adirai News
    I thank useful and thought provoking comments of Brothers, Sekna M.Nizam, Sahul Hameed, Nabidoss(poem), Meisa, Jamal MD and Mohideen which may inspire me to pen further on community subsjects.

    ReplyDelete
  12. டாக்டர் முகமது அலி ஐ பி எஸ் அவர்கள் அதிரை கல்லூரியில் பணியாற்றிவிட்டு காவல் துறையில் வாய்ப்பு வந்த போது அந்தப் பணியில் சேர்ந்தார்கள்.
    எழுத்தாற்றல் அமைந்த காவல்துறை அதிகாரிகளைக் காண்பது அபூர்வம்.
    இவர்கள் தொடர்ந்து தனது அனுபவங்களைப் பகிர வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. //மும்பையினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும் பொது, 'பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கற்பமாவதிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப் படுகிறார்கள்'.//

    Class . Need Applause.

    ReplyDelete
  14. குழந்தைகளுடன் பெற்றோர் பிள்ளைகள் என்ற எல்லையைத் தாண்டி, நண்பர்களாக பழகி நல்லது, கெட்டதுகளை மென்மையாக எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் பக்குவம் 90 சதவீத சிறுவர்/சிறுமிகளுக்கு உண்டு. இதனை மிக அழகாக கட்டுரையாக வடித்திருக்கிறார். முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ) அவர்கள்

    இவர்களின் பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். தொடர்ந்து கட்டுரைகளை வழங்கி வாருங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.