பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பயணிகள் அனைவரும் இறங்கி பஸ்ஸை பின்னால் இருந்து தள்ளும் சம்பவங்கள் நம்மூரில் தினந்தோறும் நடக்கும் ஒன்று. ஆனால் நாம் பஸ்ஸை தள்ளுவது போல ரஷ்யாவில் விமானம் ஒன்றை பயணிகள் கீழே இறங்கி தள்ளியுள்ள ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுசம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
ரஷ்யாவில் உள்ள சைபீரியா மாகாணத்தில் உள்ள இகர்கா என்ற நகரில் இருந்து கிரஸ்னோயர்ஸ்க் என்ற நகருக்கு நகருக்கு ரஷ்ய விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நேரத்தில் விமானத்தில் பிரேக் பகுதி பனியால் உறைந்ததால், விமானத்தை கிளப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே வேறு வழியின்றி விமானத்தில் இருந்த, 74 பயணிகளும் அந்த கடுங்குளிரில் கீழே இறங்கி சிறிது தூரம் விமானத்தை தள்ளினர். அதன்பின்னர் இழுவை வாகனம் மூலம் விமானம் இழுத்து செல்லப்பட்டு பின்னர் பிரேக்கில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.
இதன்பின்னர் நீண்டநேர தாமதத்திற்கு பின்னர் விமானம் கிளம்பியது. பயணிகள் விமானத்தை தள்ளும் இந்த காட்சியை ஒருவர் வீடியோ படம் எடுத்து, அதை யூ டியுபில் வெளியிட்டதால், இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. வலைத்தளங்களில் பயணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பயணிகள், விமானத்தை தள்ளுவதை படத்தில் காணலாம்.
Source: Dailymail

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.