அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அதிரை கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு சிங்கி இறால்கள் விற்பனைக்கு வந்தது. மீன் வியாபாரிகள் கிலோ ₹ 200 வரை விற்பனை செய்தனர். மருத்துவ குணம் கொண்ட இவ்வகை சிங்கி இறால்கள் 200 கிராம் முதல் 250 கிராம் வரை எடையளவில் காணப்பட்டது. இவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
சிங்கி இறால் குறித்து மீன் வியாபாரி நூர்தீன் நம்மிடம் கூறியதாவது...
'மீனவர்கள் இவற்றை மட்டை சிங்கி எனக்கூறுவர். சர்வேதச மார்க்கெட்டில் நல்ல விலை போககூடிய சிங்கி இறால்கள் கடலில் பாறைகளுக்கு அடியில்தான் வளரும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து இரைகளைத் தேடித் தின்னும். இவற்றைப் பிடிப்பதற்கென்றே சிங்கி வலை, டிஸ்கோ வலை போன்ற வலைகளும் உள்ளன. இவ்வகை இறால்களில் நார்ச்சத்து மிகுந்து காணப்படும். மிகவும் சுவையாக இருக்கும் இவற்றை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை மீனவர்களின் வலைகளில் மிகக்குறைவாகவே சிக்கும்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.