.

Pages

Wednesday, November 26, 2014

திமுக ஒன்றிய செயலாளர் பா.ராமநாதனுக்கு அதிரை திமுக சார்பில் வாழ்த்து ! [ படங்கள் இணைப்பு ]

திமுக கட்சியின் பட்டுக்கோட்டை கிழக்கு மேற்கு பகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் கடந்த [ 24-11-2014 ] அன்று பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை மேற்கு பகுதியின் பொறுப்புக்கு போட்டியிட்ட திமுக பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் மகன் தமிழரசன் என்கிற பா. ராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்நிலையில் தனது நன்றியை தெரிவிப்பதற்காக திமுக அதிரை பேரூர் அலுவலத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். இவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூர்மன்ற தலைவர் அஸ்லம், மாவட்ட பிரதிநிதி மீராஷா, இன்பநாதன், நகர துணை செயலாளர்கள் AMY அன்சர்கான், C. தில்லைநாதன் ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், வார்டு கவுன்சிலர்கள் முஹம்மது ஷெரிஃப், நூர்லாட்ஜ் செய்யது, அய்யாவு, சித்ரா சிவக்குமார், திமுக பிரதிநிதிகள் என்.கே.எஸ் சபீர், அப்துல் அஜீஸ், வாப்பு மரைக்காயர், தம்பு ரஹ்மதுல்லா, வார்டு பொறுப்பாளர்கள் இப்ராஹீம், நிஜாமுதீன், ஏரிபுறக்கரை நாகூரான் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

2 comments:

  1. அண்ணா முதல் கலைஞர் வரை தி மு க வில் அதிரை முஸ்லிம்களின் பங்கு அசைக்கமுடியாத ஒன்று சாதிக் பாட்சா நற்பனிமன்றத்தின் அடிப்படை உறுப்பினர் நான் அப்போதைய தலைவர் ராமச்சந்திரன் அவர்களுடன் எங்களின் கட்சிபனிகள் எண்ணில் அடங்கா .... அதன்பின் வெளிநாட்டு வாழ்க்கை ...ஆனால் தி மு க வின் தலைமை கழகம் ஊரில் பழுத்த தி மு க வாதிகளுக்கு அல்லது நம்மவர்களுக்கு இதில் ஏதாவது ஒரு பதவியை தந்திருகிறதா ???? அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் சமுதாயமே சிந்தித்து செயல்படுங்கள்.

    ReplyDelete
  2. அடிமை வாழ்வு தகர்த்தெறியப் பட்டாலும் இன்னும் சிலருக்கு அதுவே ருசிக்கின்றது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.