.

Pages

Wednesday, November 19, 2014

பொதுமக்கள் தலையில் விழும் நிலையில் நெசவுத்தெரு மின்கம்பம் ! புதிய மின்கம்பம் நட வேண்டுகோள் !

நெசவுத்தெரு மாதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் அருகே அமைந்துள்ள [ டெய்லர் கடை எதிரில் ] மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த மின்கம்பத்தில் 10 க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளது. தற்போது அதிரையில் தொடர் மழை பெய்து வருவதால் எந்நேரத்திலும் கீழே விழுந்து சாயும் நிலையில் இருக்கிறது.

இதுதொடர்பாக நெசவுத்தெரு மாதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் மின்சார வாரியத்தின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச்செல்லப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்கம்பதை நடுவதற்கு ஏற்பாடு நடந்தது. இதற்காக புதிய மின்கம்பமும் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் புதிய மின்கம்பத்தை நடுவதற்கு மின்சார வாரியத்தின் சார்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், மாதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்க நிர்வாகிகள், அதிரை மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, அலுவலரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில தினங்களில் புதிய மின்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்வதாக மின்சார வாரிய அலுவலர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

களத்திலிருந்து நூவன்னா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.