.

Pages

Sunday, November 30, 2014

அதிரையில் TNTJ நடத்தும் இரத்த தானம் முகாமில் இளைஞர்கள் பங்கேற்பு !

தஞ்சை காலி இரத்த வங்கியுடன் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையினர் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் இன்று [ 30-11-2014 ] காலை 10 மணி முதல் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்று வருகின்றது.

இம்முகாமில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், மருத்துவர் சேக் அலி, பல் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான், தமிழக தவ்ஹீத் ஜாமத்தின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர்.

கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, எஸ்.பி பக்கீர் முஹம்மது, மீரா, எம்.ஐ அப்துல் ஜப்பார், இரத்ததான பொறுப்பாளர் ஹாஜி முஹம்மது, ஏ.கே.எஸ் நவாஸ், எம்.கே.எம் ஜமால் முஹம்மது, தமீம் அன்சாரி, சுலைமான், தமீம் அன்சாரி, ராஜிக் முஹம்மது, ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் தஞ்சை காலி இரத்த வங்கி மருத்துவ குழுவினருடன் இணைந்து இரத்த கொடையாளருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். முகாம் தொடர்ந்து மதியம் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
இப்ராஹீம் அலி

1 comment:

  1. அதிரையரின் மஹாத்தான தன்னார்வ மனிதநேயத்தைஇங்கே குறிப்பட வேண்டும் சுமார் 106 ஆர்வளர்கள் முன்வந்து தந்ததில் Dr.சேக்கலி, Dr.பசுலுல் றஹ்மான்,சேர்மன் அஸ்லம் குறிப்பிட தக்கவர்கள் இதன்மூலம் தஞ்சையில் குறிகிய நேரத்தில் காலை(10-30am to 1-30pm)வரை தனியார் இரத்த வங்கி முகாமில் அதிகம் என்ற ரிக்காடும் பதிவாகி உள்ளது. நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.