துபாய் : துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்கள் டிரேடர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
காட்டன் செக்ஸ்டைல் கண்காட்சியினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் அமீரகம் மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திற்கு இந்திய கன்சுலேட் உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா குமரையா இந்திய துணிகளின் மீது குறிப்பாக காட்டன் துணிகளின் மீது அமீரகம் அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்றார். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் வந்திருக்கும் விற்பனையாளர்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டெக்ஸ்பிராசில் இணை இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
இந்தியாவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. குறிப்பாக தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த ஆதித்யா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இக்கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம், காட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், இந்திய தூதரகம், மற்றும் கன்சுலேட் ஆகியவற்றின் ஆதரவுடன் இக்கண்காட்சியினை நடத்தியது.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.