.

Pages

Saturday, November 22, 2014

கந்தூரிக்கு எதிராக RDO அலுவலகத்தில் ADT

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.

கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

- ADT

தகவல்: ஏ.முஹம்மது அமீன்

2 comments:

  1. ???????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............................................................

    ReplyDelete
  2. வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது.

    மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

    உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது.

    ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார்.

    மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.//

    இதிலிருந்து என்ன தெரிகிறது. இவர்கள் எல்லாம் தெரிந்த மேதாவிகள் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கின்றாகள். பலாப்பழம் மேல் முட்கள் இருக்கத்தான் செய்யும். அறிந்தவர்கள் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அமைதி நிலவ வேண்டும் என்பதே முக்கியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.