.

Pages

Tuesday, November 18, 2014

காதல் போதையால் நிகழ்ந்த கொடூரம் ! [ படங்கள் இணைப்பு ]

இளம் வயது காதலால் நிகழ்ந்த கொடுரம் குறித்து இன்றைய பெரும்பாலான நாளிதழில் செய்தியாக வந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்க கூடும்.

இதுதான் அந்த நாளிதழ் செய்தி :
// ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினர். காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து வந்தனர்.

அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். சிறிது தூரம் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் இறந்துகிடந்தனர். ராமநாதபுரம் ரயில்வே போலீசாருக்கு டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//

படிப்பினை 1:
பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், சமுதாயத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக மிக அவசியம்.

தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருப்பது அவசியம். தங்களின் பொறுப்பை மறந்து, பிள்ளைகளுக்கு 'பாசம்' 'ஃபேஷன்' என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.

படிப்பினை 2:
நமது வாழ்க்கையில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்பப்பருவம், முதுமைப்பருவம் என கணக்கீடு செய்தால் இதில் ரொம்ப முக்கியமானது, சிக்கலானது வாலிபப் பருவமாக இருக்கிறது.

சமூகம் போற்றக்கூடிய பொறுப்பான மாணவன், மாணவி என்றும், பெற்றோர்கள் மகிழக்கூடிய நல்ல பிள்ளை என்றும், ஆசிரியர்கள் பெருமைபடக்கூடிய நல்ல மாணவன், மாணவி என்று இப்பருவத்தில்தான் உருவாகின்றன.

அதேபோல் பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதும், குற்ற செயல்களில் ஈடுபடுவதும், கல்வியில் பின்தங்குவதும், என எல்லாமும் இந்த வாலிப பருவத்தில்தான் உருவாகின்றன.

இன்றைய வாலிப பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை உணர வேண்டும். மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வாலிப பருவத்து மாணவ, மாணவிகளை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேல் நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் வாலிப பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியரும், வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடமை என்று மட்டும் இருந்துவிடாமல், மாணவர்களின் ஒழுக்கங்கள், அவர்களின் கடமைப் பொறுப்புணர்வுகள், கல்வி அறிவு, ஆரோக்கியம் என அவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

      Delete
  3. பரிதாபாத்திற்க்குரிய நிகழ்வு அறியாப் பருவத்தில் காதல் வலையில் சிக்குண்டு வாழவழிதேரியாமல் அழித்துக் கொண்டவர்கள்.

    இப்பருவத்தினருக்கா த்தான் கவனம் வாலிபப் பருவம் என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் கடந்த மாதம் ஒரு கட்டுரை எழுதினேன். அதன் LINK

    http://nijampage.blogspot.ae/2014/09/blog-post_12.html

    ReplyDelete
  4. சினிமாவில் நடப்பது எல்லாம் உண்மை என நம்புவதால் ஏற்படும் விபரீதம்,

    இரண்டு பேருமே இறந்து விட்டார்கள் நல்லது இதில் ஒருவர் இறந்து ஒருவர் பிழைத்து அல்லது இருவருமே உறுப்புக்கள் இழந்து பிழைத்து வேதனையுடன் நாட்களை கடத்துவதைவிட இரண்டுபேருமே போனது சரிதான்.

    இரண்டு உயிர்களும் மரித்தபின்பும் இரண்டு ஆத்மாக்களும் விலகாமல் சந்தித்தால்,
    " ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா............
    உண்மைகாதல் மாறி போகுமா...." என்று பாடுங்கள்.

    எத்தனையோபேர் எத்தனையோ விதமாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் இந்த கிறுக்கு ஜோடிக்கு தெரியாம போச்சே! . லூசு ஜோடி!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.