.

Pages

Thursday, January 15, 2015

20 கிலோ எடையில் 10 மாத குழந்தை !

கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோ என்ற பெண்மணியின் மகளான ஜுனைட்டா வேலண்ட்டினா ஹெர்னாண்டஸ் என்ற இந்தக் குழந்தை பிறக்கும்போது ஆறு பவுண்டு எடை மட்டுமே இருந்தது.

ஆனால், நாளடைவில் எடை கூடிக் கொண்டே வந்து பத்தே மாதங்களில் 20 கிலோ எடையுடன் மொழுமொழு, கொழுக்கொழு குழந்தையாக அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் செல்லக் குட்டியாக இந்தக் குழந்தை திகழ்ந்தாலும் வயதுக்கு மீறிய இரட்டை எடையுடன் வளர்ந்துவரும் தனது செல்ல மகளின் எதிர்காலம் பற்றி சாண்ட்ரா பிராங்கோவால் கவலைப்படுகிறார்.

10 மாதங்களுக்குள் இரட்டிப்பாகி விட்ட இந்த உடல் பருமன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நூறு மடங்காகி விடாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக உரிய சிகிச்சை அளித்து மகளின் உடல் எடையை குறைக்க என்ன செய்வது? என்பது தொடர்பாக டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டுவரும் இவர், இதுகுறித்து கூறுகையில், தற்போது நான் வேலை ஏதும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை செலவுக்கு என் கையில் பணம் இல்லை. அதனால், முழுவீச்சில் சிகிச்சை அளிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.