முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபகாலமாக வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது எங்கு பார்த்தாலும் கூட்டம்கூட்டமாக நூற்றுக்கணக்கான வெறி நாய்கள் நின்று மக்களை அச்சுறுத்தி வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்று திண்டு உள்ளது. இதுக்குறித்து பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் நாய்களை பிடித்து அப்புறபடுத்வேண்டும் என்று கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறபடுத்துவதாக கூறி பிடித்து சென்று ஊருக்கு எல்லையில் விட்டு வந்தனர் அந்த நாய்கள் மீண்டும் திரும்பி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டுக்குள் 20-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் புகுந்தது மக்களை விரட்டி அடித்தது அதனை விரட்ட நினைத்த அப்பகுதி மக்களை சீண்ட பாய்ந்தது இதனால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று வழியில்லாமல் ரோட்டில் தவித்தனர். பின்னர் நீண்ட போராட்டதிற்கு பிறகு அந்த வெறி நாய்கள் மொட்டை மாடிக்கு சென்றதும் சாமர்த்தியமாக கேட்டை பூட்டி நாய்களை சிறை வைத்தனர். இரவு முழுவதும் தூக்கத்தை துளைத்த அப்பகுதினர் விடிந்ததும் நேற்று காலை பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தனர் அதற்க்கு பேரூராட்சி நிர்வாகம் வர மறுத்ததாக தெரிகிறது அதனால் வெறுத்து போன அப்பகுதி மக்கள், சிறை வைக்கப்பட்ட நாய்களை திறந்து விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வீரமணி கூறுகையில்:
'தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் நாங்களும் பொதுமக்களும் அவதி படுகிறோம். நேற்று எங்களது வீட்டுக்குள் வெறி நாய்கள் புகுந்து எங்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது. பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தோம் அவர்கள் யாரும் வரவில்லை. பின்னர் நாய்களை திறந்து விட்டுவிட்டோம் பேரூராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.