.

Pages

Sunday, January 18, 2015

ரெஸ்ட் இல்லாமல் 3 நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் பரிதாப பலி !

தாய்வானில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 32 வயதான சியே என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் இன்டர்நெட் கபே ஒன்றிற்கு வீடியோ கேம் விளையாட வருவது வழக்கம். தினமும் வருவதால் அனைவருக்கும் பரீட்சயமானவாராக இருந்தார்.

இந்நிலையில் இன்டர்நெட் கபேக்கு நேற்று வந்த சியே தனது இருக்கையில் அசைவற்றுக்கிடந்தார். வழக்கமாக வீடியோ கேம் விளையாடிய அசதியில் சியே அப்படி தூங்குவார் என்பதால், அவரை பார்த்த ஊழியர்கள் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் அருகே சென்று சோதித்தனர்.

அந்த இளைஞர் அசைவுகள் அற்ற நிலையில் கிடப்பதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சியேவின் இதயம் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மூன்று நாட்களாக வீடியோ கேம் விளையாடியதே அவரது மரணத்திற்கு காரணமென்றும் தெரிவித்தனர்.

இதேபோல் புதிய தைபே நகரத்தில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றில் 38 வயதான நபர் ஒருவர் ஐந்து நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய பிறகு கடந்த முதலாம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.