இந்த பட்டியலில் இணையவிருக்கிறது ஹார்ட் ஆப் யூரோப் (Heart Of Europe) என்ற பனிப்பொழியும் செயற்கை தீவுகள் நகரம்.
இதனை உருவாக்க Kleindienst என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பனி பொழியக்கூடய பகுதிகளான ஆஸ்திரியா, மொனாக்கோ, ஜெர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் செண்ட். பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Kleindienst நிறுவனம் கூறுகையில்...
ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உருகிவிடாமலும், நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
எனவே இயற்கையாகவே ஐரோப்பிய நகரங்களில் நாம் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் முதன்மை நிர்வாக அதிகாரி ஜோசப் கூறுகையில்,
இது போன்ற தொழில்நுட்பம் உலகில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் முழுவதுமாக வெளிப்புறத்தில் கட்டமைப்பது என்பது இதுவே முதல் முறை. இந்த திட்டத்தை செயல்படுத்த சாதரணமாக ஒரு ஷாப்பிங்மாலுக்கு எந்த அளவிலான மின்சாரம் தேவைப்படுமோ அதே அளவிலான மின்சாரம் போதுமானது. அனைத்து அனுமதிகளும் முறையாக பெறப்பட்டு 2016 ல் இந்நகரம் தயாராக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
துபாயில் எப்போதும் கொண்டாட்டம்தான், ஆனால துபாயில் பணியில் இருப்பவர்களின் பல குடும்பங்களுக்கு இங்கு திண்டாட்டம்தான்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com