.

Pages

Monday, January 5, 2015

அதிரையில் இன்டர்நெட் துண்டிப்பால் வங்கி பணி முடக்கம்: பொதுமக்கள் அவதி!

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், விவசாயிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் சேமிப்புகணக்கை வைத்துள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வங்கிக்கு செல்லும் இன்டர்நெட் கேபிள் துண்டிப்பால் பணிகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் சில மணி நேரங்கள் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.

இதுகுறித்து தொலைதொடர்பு ஊழியர்கள் தரப்பில் விசாரித்த வகையில்...
'நெடுஞ்சாலை துறையின் சார்பில் அதிரை பேருந்து நிலைய ஈசிஆர் சாலை முதல் 800 மீட்டர் வரையிலான பட்டுகோட்டை செல்லும் சாலையை மேம்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக சாலையின் குறுக்கே கழிவு நீர் செல்ல பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டும் போது தொலைதொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த கேபிள் வழியே செல்லும் அணைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளும் இயங்கவில்லை. இன்று காலை முதல் துண்டித்த கேபிள்களை கண்டறிந்து இணைக்கும் பணிகளில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இன்று மாலைக்குள் இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நெடுஞ்சாலைத்துறை, சாலையில் தன் வேலையை ஆரம்பிக்கும் முன்பு, ‎தொலை தொடர்பு மற்றும் மின்சார வாரியம் போன்ற நிறுவனகங்களை ‎தொடர்பு கொண்டு செயல் பட்டால் இப்படி அவதூறு நடக்காது.‎

    ஆக மொத்தத்தில் யாரும் யாருடனும் ஒத்துப்போவது கிடையாது என்பது ‎வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.