.

Pages

Friday, January 2, 2015

அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் சிறுவனுக்கு உதவ வேண்டுகோள் !

முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது அலி. வருமானத்திற்காக டீ கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முகம்மது ரிஸ்வான் ( வயது 11 )  சில தினங்களுக்கு முன்பு வீட்டின் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதில் சிறுவனின் வாய் நாடி பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக தஞ்சை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் மேற்கொள்ள இருக்கும் அறுவை சிகிச்சைக்கு ₹ 2.5 லட்சம் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவனின் மருத்துவ செலவினங்களுக்கு தேவைப்படும் நிதியை வழங்க நம்மின் உதவியை நாடி வந்துள்ளனர். இதே குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுவனின் இளைய சகோதரர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கி கணக்கின் விவரங்கள்:
F. Haleed,
Indian Bank
A/C No. 592370157,
Muthupet -614 704.

மேலதிக தகவல் தொடர்புக்கு, 
Cell; 98 42 36 26 16 , 90 95 66 60 46 , 99 65 85 47 36

பரிந்துரை: சுனா ஈனா, முத்துப்பேட்டை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவனின் படங்களும், சிகிச்சைக்காக இதுவரை செலுத்தியுள்ள செலவீனங்களின் விவரங்கள்:








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.