.

Pages

Saturday, January 31, 2015

காவல்துறை நடத்திய முப்பெரும் விழா !

தஞ்சை மாவட்ட காவல்துறை- பேராவூரணி காவல்நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு- விழிப்புணர்வு பேரணி, வெற்றி நிச்சயம், விபத்து தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு குறும்படம் திரையிடல் என முப்பெரும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.
               
மதியம் மூன்று மணிக்கு பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகில் இருந்து எஸ்.டி.டி திருமண மண்டபம் வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், காவல்துறையினர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
                   
பின்னர் எஸ்.டி.டி திருமண மண்டபத்தில் மாணவ, மாணவியர் பங்கேற்ற   "வெற்றி நிச்சயம்" விநாடி- வினா போட்டி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், வீ.ஆர்.வீரப்பா மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர வர்த்தக கழகம் சார்பில் ரூபாய் 10,000 பரிசாக வழங்கப்பட்டது.
         
அதனை தொடர்ந்து விபத்து தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படமான " உயிர் மற்றும் ஆறாத வடு " திரையிடப்பட்டது.
             
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மாணிக்கவள்ளி, பேராவூரணி பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், அரசு தலைமை மருத்துவர் ஏ.காந்தி, தொழிலதிபர் எஸ்.டி.டி. சிதம்பரம், ஏஷியன் சம்சுதீன், ராயல் அஜ்மீர் அலி, குமரப்பா பள்ளி தாளாளர் ஜி.ஆர்.ஶ்ரீதர், வர்த்தக சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா, செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் ஏ.சி.சி.ராஜா, வீரப்பா பள்ளி தாளாளர் வீ.இராமநாதன், தலைமை ஆசிரியர்கள் இளங்கோவன், எஸ்.தேன்மொழி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
           
காவல்துறை உதவி ஆய்வாளர் பெஞ்சமின் பன்னீர்செல்வம், சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், பெத்தபெருமாள்,  தலைமை காவலர் துரைராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன் விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி

1 comment:

  1. சாலைப் பாதுகாப்பு- விழிப்புணர்வு நடத்துவது நல்லது தான் பேரணியில் பதாகைகள் மட்டும் போதாது அதனுடன் பாடை ( சவ ஊர்வலம் ) எடுத்து வருவது போல் இருக்கணும், விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் நேரிடும் விபத்து என்பதை சுட்டிக்காட்டனும்,
    லைசென்ஸ் இல்லாதவர்களிடமும், ஹெல்மெட் போடாதவர்களிடமும், விதிகளை பின்பற்றாவர்களிடமும் டிராபிக் போலீஸ் பணம் வாங்குவதை எப்ப நிறுத்த போறீங்க.

    மீசை பார்த்தாலே பயமா இருக்கு... வீரப்பனின் தம்பிவோ!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.