.

Pages

Sunday, January 25, 2015

பட்டுக்கோட்டை இரயிலடி பள்ளிவாசல் - தேவாலயம் மீது திடீர் தாக்குதல் !

பட்டுக்கோட்டை இரயில்வே நிலையம் அருகே அதிரை செல்லும் பிராதன சாலையில் அமைந்துள்ளது இரயிலடி பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலில் இப்பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் - வர்த்தகர்கள் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை தினமும் நிலை நிறுத்தி வருகின்றனர். அதேபோல் இதன் அருகில் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு கிருஸ்த்துவ சமூகத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீதும், தேவாலயத்தின் மீதும் திடீர் தாக்குதலை தொடுத்துள்ளனர். தாக்குதலில் பள்ளிவாசலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. அதேபோல் தேவாலயத்தின் முகப்பு பகுதியும் சேதமடைந்துள்ளது. ஒரே நேரத்தில் பள்ளிவாசல் மீதும், தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்திருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் நிர்வாகத்தினர் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

3 comments:

  1. இது வேதனைப் பட வேண்டிய செய்தி என்பதை விட வெட்கப்பட வேண்டிய செய்தி.

    இதைச் செய்தோர் குடியரசு தினப் பரிசாக செய்திருக்கிறார்களா?

    ReplyDelete
  2. மூன்றாம் நபர் சிண்டு முடித்தல் என்று பெயர் இதற்குத்தானோ ? அமைதியைக் குலைக்க திட்டமிடுகின்றனர்.

    ReplyDelete
  3. குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் பஸ், ரயில்,விமான நிலையங்களில் தீவிரமாக உள்ளது அதே நேரத்தில் நாட்டில் இருக்கும் வழிபாடு இடங்களுக்கும் தேவை என்பதை மேற்கொண்ட சம்பவம் உணர்த்துகிறது. பிரிவினை வாதிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.