உணவகத்தின் சுவர், பார், மேஜை, நாற்காலி என்று எல்லாமே முழுக்க முழுக்க பாறை உப்பால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இந்த உணவகத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்த உணவகத்தை வடிவமைத்த எமிட்டாஸ் டிசைனிங் க்ரூப் என்ற குழுவினர் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டிடங்களைக் கட்டுவதில் நிபுணர்கள்.
அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள். அந்த உணவகத்தின் அருகில் உப்புச் சுரங்கம் இருப்பதால் உப்பிலேயே அந்த கட்டிடத்தைக் கட்டியுள்ளனர்.
பாறை உப்பிலிருந்து செய்யக்கூடிய இந்தப் பொருள்களை மீண்டும் மீண்டும் மறு உபயோகம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உப்புக்குக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், வெளியில் இருந்து வரும் அசுத்த காற்றை வடிகட்டி, சுத்தமான காற்றை உணவகத்துக்குள் அனுப்புவதாக கூறுகின்றனர்.
மேலும், உப்பால் உருவாக்கப்பட்ட இந்த வித்தியாசமான உணவகத்தைப் பார்ப்பதற்கே ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டவர்கள் ஈரான் நாட்டிற்கு படையெடுக்கின்றனர்.
Subhanllah.. Allah podhumaanavan
ReplyDelete