இந்நிலையில் மேலத்தெருவில் உள்ள 'சூனா வீட்டு பள்ளிக்கூடம்' என அழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 1968 ம் ஆண்டு தொடக்க பள்ளியாக இருந்த போது கல்வி பயின்ற சக மாணவர்கள் ஆண்டு இறுதியில் வகுப்பு ஆசிரியருடன் ஒன்றிணைந்து படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த இரண்டு படங்களில் இடம்பெற்றுள்ள சிறுவர்கள் - இளைஞர்கள் தற்போது 50 - 55 வயது மதிக்கதக்க பெரியவர்களாக பல்வேறு நாடுகளில் பணிபுரிபவர்களாகவும், கல்வியாளர்களாகவும், விவசாயிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் இருப்பார்கள் என நம்புவோம்.
இந்த படத்தில் நீங்கள் இடம்பெற்றிருந்தால் கருத்துரை பகுதியில் தெரியப்படுத்தவும். மேலும் அதிரை நியூஸ் வாசகர்களாகிய நீங்கள் நமதூர் அல்லது வெளியூரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி - நடுநிலைப்பள்ளி - மேல்நிலைப்பள்ளி - மெட்ரிக் பள்ளி - கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றபோது எடுத்த புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் உடனடியாக பதியப்படும்.


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அன்றைய மாணவர்களின் முகத்தில் இன்பமும் துடிப்பும், படிப்பு பரவசமும், உற்சாகமும், மரியாதையும், ஆர்வமும் தெரிகின்றது.
இன்றைய மாணவர்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. காரணம் என்னவென்றால், எப்போ பார்த்தாலும் எதையோ இழந்தது மாதிரி காணப்படுகிறார்கள்.
காலத்தால் வந்த கொடுமையா? அல்லது தானாக தேடிக்கொண்ட கொடுமையா?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
/*இன்றைய மாணவர்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. காரணம் என்னவென்றால், எப்போ பார்த்தாலும் எதையோ இழந்தது மாதிரி காணப்படுகிறார்கள்*/ - மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படந்துள்ளனர் காரணம் பல்லுடகங்கள் (செல்போன் டிவி முதலியன )
ReplyDelete