.

Pages

Wednesday, January 14, 2015

அதிரையர்களின் கனிவான கவனத்திற்கு !


திரை நகரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பத்தப்பட்ட பணம் பறிப்பு, நகை திருட்டு, கொள்ளை முயற்சி போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது, இதை நாம் ஊடக வாயிலாக அறிய முடிகிறது.

யாரை சந்தேகப்படுவது?

அதிரை வாசிகளில் ஒரு சிலரா?

அல்லது,
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிரையில் தங்கி இருந்து பலதரப்பட்ட கூலி வேலைகளை பார்த்து வரும் வேலையாட்களா?

அல்லது,
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினம் தினம் அதிரைக்கு வந்து போகும் பல தரப்பட்ட சில்லறை வியாபாரிகளா? (பஞ்சு மிட்டாய், கம்பளம், போர்வை, பழம், பழைய இரும்பு, வீட்டு உபயோகப் பொருள்களை பழுது பார்த்தல், ஆசிரம்களிளிருந்து வருகிறோம் என்று சொல்லும் வெளியூர் பெண்கள், இன்னும் பலர்)

அல்லது,
உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலத்தவர்கள், இவர்களின் கூட்டு முயற்சியா?

இப்படி பல கோணங்களில் சிந்தித்து பார்த்தாலும், திருடன் பிடிபடுவது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர்வாசிகளின் அலட்சியப்போக்கு மறைந்து விழிப்புணர்வு ஏற்படாதவரை இந்த ஊர் எப்படி உருப்படும்?

இதுக்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது?

அதிரை நகரில், தெருக்களில் இனம் தெரியாதவர்கள் தொழில் ரீதியாகவோ, வேறு எப்படியோ தென்பாட்டால், கண்டவர்கள் அவர்களை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும், சந்தேகப்படும்படியாக இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

நடமாடும் வியாபாரிகள் யாராக இருந்தாலும், மாலை ஐந்து மணிமுதல் காலை பத்துமணி வரை தெருக்களில் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது.

ஆசிரமத்தில் இருந்து வருகிறோம் என்று சில பெண்கள் கூட்டம் வீட்டுக்குள் இலகுவாக நுழைத்து விடுகின்றனர். இப்படி வருகின்றவர்களை முதலில் வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது, இரண்டாவதாக இப்படி வரும் பெண்களை கடுமையாக விசாரிக்கவேண்டியது வீட்டாரின் கடமை.

வேறு யாராவது “மின்சாரம், கேஸ், மக்கள் கணக்கெடுப்பு, இன்னும் பல விசாரணைக்கு வந்தால், தகுந்த அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள். வீட்டுக்கதவை முழுவதுமாக திறக்காமல் இரும்பு கிரிலுக்குள் உற்றுப்பார்த்து யார் என்று ஊர்ஜிதப்படுத்திய பின்னரே அடுத்த முடிவுக்கு வர வேண்டும்.

மேலும் ஸ்பிரே போன்ற சாதனங்களைக் கொண்டு மயக்கம் வரக்கூடிய வஸ்த்துக்களை முகத்தில் அடிப்பதும் பல இடங்களில் நடந்து வருகின்றது.

பெண்மணிகளே, நீங்கள் ஆட்டோக்களிலும், பேரூந்துகளிலும் பயணம் செய்யும் போதும், பொது இடங்களாகிய மருத்துவமனை, ஷாப்பிங் சென்டர், வங்கி, நகைக்கடை, தெரு இன்னும் வீட்டைத்தவிர ஏனைய இடங்களில் செல்லும்போதும்,  செல்போனிலும், மேலும் ஒருவரோடு ஒருவர் நேருக்குநேர் சந்தித்து பேசும்போதும் உங்களின் குடும்ப விசயங்களை பேசாதீர்கள். அப்படி குடும்ப விஷயங்கள் ஏதேனும் பேச நேர்ந்தால் வீட்டுக்குள் வந்து பேசுங்கள். இதுதான் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு.

பெண்மணிகளே இன்னும் கேளுங்கள்: நீங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கும்போது உங்களின் உறவினர்களுக்கோ அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்கு உங்கள் மொபைல் போனை இயக்க நேர்ந்தால், அக்கம் பக்கம் பார்த்து விட்டு இயக்கவும், காரணம் உங்களுக்கு பின்னால் உங்களுக்கே தெரியாமல் மர்ம நபர்கள் வேறு யாராவது உங்களுடைய மொபைல் போனை கண்காணிக்கலாம், நீங்கள் டயல் செய்யும் மொபைல் நம்பரை அந்த மர்ம நபர் குறித்துக் கொள்ளலாம், மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை அந்த மர்ம நபர் தன் மொபைல் போனில் படம் பிடித்துக் கொள்ளலாம்.

மொபைல் போனுக்கு ரீ சார்ஜ் செய்ய நினைத்தால், ஆண் லைனில் செய்து கொள்ளுங்கள், அல்லது ரீ சார்ஜ் கார்டை வாங்கி நீங்களே செய்து கொள்ளுங்கள், எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் மொபைல் நம்பரை வெளியில் கொடுத்து விட வேண்டாம். எளிதில் யாரையும் இலகுவாக நம்பி விடக் கூடாது.   

எங்கு சென்றாலும் தனியாக செல்லவேண்டாம், தகுந்த பாதுகாப்போடு செல்லவேண்டும், இந்த விஷயங்களில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் யாராக இருந்தாலும், இவர்களை வைத்து வேலை வாங்கும் கட்டிட உரிமையாளர்கள், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுப்பதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும். இதற்க்கு கட்டிட உரிமையாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் பொது மக்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்னும் கடுமையாக சிந்திப்போமேயானால், சரியாக ஒரு மூன்று வருடத்திற்கு கட்டிட வேலைகளை நிறுத்திப் பாருங்கள், திருட்டு தானாக குறைந்து விடும். காரணம் பொது மக்களில் பலர் கட்டிட தொழிலாளர்களையே சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள்தாம் மூளை முடுக்கெல்லாம் சென்று வேலை பார்கின்றனர். அவர்களில் சிலர் இப்படியான திருட்டு செயலில் ஈடுபடலாம் என்றும் பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மூன்று வருடங்களா?

சரி வேண்டாம்,
ஒரு வருடம்!?

இதுவும் சரியில்லையா?
அட்லீஸ்ட், வெள்ளிக்கிழமை?

இதுக்கும் வலிக்குது என்றால் உங்களை என்ன செய்வது?

மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை கடுமையாக கையாண்டால் திருட்டு குறைய வழி உண்டு.

கரின் பல பக்கத்திலும் தீவிர கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

3 comments:

  1. மிக உண்மையான கருத்துக்கள். சொல்லப்போனால் நவீன சாதனங்களை சகஜமாக பயண்படுத்தும் நம் மக்களுக்கு அஜக்கிரதையினால் ஏற்படும் அதன் தீயவிளைவுகள் தெரிவதில்லை.

    கடந்த முறை ஊர் வந்திருந்த போது பட்டுக்கோட்டையில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் நான் கண்ட சில சம்பவங்கள்.

    குழுவாக ஆண் துணையின்றி ஆட்டோவில் வந்த பெண்கள். ஆட்டோ டிரைவர் தெரிந்தவர்தான். அவரின் துணை போதாதா என்கின்றனர். ஆனால் போக்குவரத்து காவலர்கள் டிரைவரை விரட்ட அவர் இவர்களை கூட்டத்தில் இறக்கி விட்டு போகும்போது போன் பண்ணுங்க என்று போய்விட்டார்.

    அதன் பிறகு அந்த பெண்கள் தங்கள் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டனர். அதை சில அந்நிய இளைஞர்கள் கேலியாக தங்களுக்குள் அழைத்துக்கொண்டனர். பொது இடங்களில் பெண்கள் தம் சொந்த பெயரை உபயோகிப்பதை விட குறிப்புப் பெயர்களை உபயோகிக்க வேண்டும். உ-ம் உம்மு சாகுல், பின்த் சுக்கூர், தாஹாஅம்மா.

    அங்கு சந்தித்த மற்றொரு குழுவிடம் தங்கள் செல் நம்பரை சப்தமிட்டு சொல்லினர். அதை அங்குள்ள எத்தனைபேர் குறித்து வைத்து கண்ட நேரத்தில் அழைத்தனரோ. பிறர் அறியாமல் செல் நம்பரை அருகில் சென்று சன்னமாக கூறவேண்டும் அல்லது தோழியின் செல்லை வாங்கி தமது நம்பரை டயல் செய்து தமக்கு அழைப்பு வந்ததும் சேமித்துக் கொள்ள வேண்டும்.

    முக்கியமாக ஆண்துணை கிடைக்காத பட்சத்தில் வயது முதிர்ந்த தைரியமான பெண்மனி யாரையாவது துணைக்கழைத்து செல்லலாம். வியாபாரிகளிடம் அவர்களை பேச சொல்லலாம்.

    ReplyDelete
  2. எத்தனை திருட்டு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம் நம் வாழ்வில், வெளிவூர்க்காரன் உள்ளே வந்து திருட்டுபோவதை விட உள்ளூர்க்காரன் திருட்டுதான் அதிகமாக இருக்கும், திருடன் நம்மை சுற்றிதான் இருக்கான் என்பதை சம்பவத்தை நினைவுக்கூர்ந்தால் தெரியும்.
    வீட்டுக்கு உள்ளே அதிகம் வருபவர்கள் சொந்தம், தெரிந்த நபர் தான் திடீரென் செல் காணாமல்போய்விடும் சந்தேகம் இவர்கள் மீது தான் இருக்கும் பெருந்தன்மை கருதி அம்மணி சப்தம் போடாமல் போய் தொலைறான் என்று விட்டு விடுவார்கள்.

    திருட்டு புத்தி உள்ளபயனுக்கு எந்தப் பொருளை எப்ப எடுக்கலாம் என்று நல்லா தெரியும் வீட்டில் அதிகம் பயன்படாமல் இருக்கும் பித்தளை பாத்திரம் ( அண்டா ) மாயமாக மறைந்து விடும் காரணம் கண்விழித்து டிவி பார்ப்பதால் பகல் நேரத்தில் ஆழ்ந்து உறங்கும் போது ஆட்டை போட்டு விடுகிறான் முன்பு செல் திருடியவன். பாத்திரக் கடையில் போய் பார்த்தால் களவு போன பாத்திரம் இருக்கும், கடைக்காரன்கிட்டே போய் சண்டை போடா முடியுமா அம்மனியால?

    குழந்தை கழுத்தில் செயின் போட்டு அழகுப்பார்ப்பதில் நம்மவர்க்கு பிரியம் தான், வெளியில் சென்று வந்த குழந்தையின் செயின் காணோம், என்றும் வராதவ இன்றைக்கு அவ தான் பிள்ளையே தூக்கிட்டு போனா, அவளுடைய வேலைதான் இருக்கும் என்று கனத்த சந்தேகம் உறவினர் மீது, இருவரும் சண்டை போட்டுக்கொண்டு தீராத பகையாகி விடும், உண்மை குற்றவாளி ???.

    இதெல்லாம் கண்காணிக்க CCTV வைத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை வரும், ஏன் வந்தார் என்று கேள்வி கேட்டால் உங்களுக்கு சந்தேகமா? பிரச்னை பெரிதாகி விடும்.
    மேற்சொன்ன திருட்டு எல்லாம் வெளிவூர்க்காரன் அல்ல, குடும்பத்தில் உள்ள சிறுபிள்ளைகள், இந்த சின்ன திருட்டை தடுக்க தவறவிடும் பெற்றோர்கள் அவன் தண்ணி அடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான், ஆரம்பத்தில் அவனுக்கு மார்க்க கல்வி, தொழுகை கொடுத்து இருந்தால் இந்த நிலைமை அவனுக்கு வராது.

    அப்பவே பட்டுக் கோட்டையார் சொன்னாரே:
    திருடாதே பாப்பா திருடாதே.....

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது.

    ReplyDelete
  3. Its valuable Article

    Thanks for your Information

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.