அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை முதல் தவணையாக 18-1-2015 அன்றும், இரண்டாவது தவணையாக 22-02-2015 ஆகிய இரண்டு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பாக ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறும் முதலாவது சுற்றில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6,040 சொட்டு மருந்து புகட்டும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். நகரப் பகுதிகளில் 128 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோயில்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எத்தனை முறை தடுப்பு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாகக் கட்டாயம் சொட்டு மருந்து புகட்டப்பட வேண்டும்.
வேலைநிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து தாற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.