முத்துப்பேட்டை அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில் நேற்று மீலாது நபி விழா பொது கூட்டம் நடத்துவதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ச்சியின் தலைவர் ஜின்னா என்பவர் முத்துப்பேட்டை காவல் துறையில் அனுமதி பெற்றிருந்தார். அதன் படி முத்துப்பேட்டை பெரிய கடைத்தெரு முகைதீன் பள்ளி வாசல் அருகே கூட்டம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல் துறை திடீரென்று கூட்டம் நடத்தக்கூடாது என்று தடை விதித்து நேற்று முன்தினம் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டில் அனுப்பினர். ஆனால் விழா கமிட்டியினர் நோட்டீஸ் வாங்க வாங்க மறுத்து திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் காவல் துறையினர் வருவாய் துறை மூலம் மீலாது விழா கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்டதாகவும் கூறி விழா கமிட்டியின் தலைவர் ஜின்னாவின் வீட்டு வாசலில் நோட்டிஸை ஒட்டினர். இதனால் அனைத்து முஸ்லிம் ஜமாத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
பின்னர் தெற்கு தெரு அரபு சாஹிப் பள்ளி வாசிலில் ஜமாத் தலைவர் ராவுத்தர் தலைமையில் அனைத்து ஜமாத் நிர்வாகி மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூட்டமாக கூடினர். இதில் த.மு.மு.க சார்பில் வக்கில் தீன் முகம்மது, சம்சுதீன், எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சித்தீக், முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முகம்மது அலி, தம்பி மரைக்காயர், மனித உரிமை கண்ணகாணிப்பாளர் பசீர் அகம்மது, ஜமாத் நிர்வாகி நாசர் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வந்து ஜமாத் நிர்வாகிகளிடம் ஒரு வாரம் கழித்து நிகழ்ச்சியை நடத்தும் படி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஜமாத் நிர்வாகிகள் திட்டமிட்டப்படி கூட்டம் நடத்துவோம் என்று உறுதியாக கூறினார்கள். இதனால் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஏமாற்றத்துடன் திரும்பினார். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடையை மீறி நேற்று மாலை மீலாதுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று ஜாம்புவானோடை தர்கா பகுதியில் உள்ள ஒருவரது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென்று முத்துப்பேட்டையிலிருந்து ஜாம்புவானோடை, தெற்குகாடு, கல்லடிக்கொல்லை வழியாக பைக் பேரணி நடத்தினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனை அடுத்து 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென்று பொங்கல் பண்டிகைக்கு இடையூறு ஏற்படுத்தி அனுமதி இல்லாமல் பைக் பேரணி நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், முன்னால் மாவட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
கூடுதல் படங்கள்: சுனா ஈனா

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.