தஞ்சாவூர் மாவட்டம் அதிரை தக்வா பள்ளி பின்புறமுள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையின் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்வரனுக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து அவர் தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தமிழ்மாறன் தலைமையிலான போலீஸார் அதிராம்பட்டினம் தனியார் அரிசி அரைவை மில் அருகே இருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நடுப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் (33), கறம்பக்குடி அருகேயுள்ள கலியராயன்விடுதியைச் சேர்ந்த திவாகரன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 3 மூட்டைகளில் 187 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவியதாக அதிராம்பட்டினம் ரேஷன் கடை விற்பனையாளர் விஜயலட்சுமி (35), கைது செய்யப்பட்ட பால்ராஜ், திவாகரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி: தினமணி

ஒருபுறம் தமிழ்நாட்டு மக்கள் தலையில் பேருந்து கட்டண உயர்வு , பால்விலை உயர்வு ,மின்கட்டண உயர்வு என கட்டண உயர்வுகள் . மறுபுறம் இலவசம் அல்லது விலையில்லா பொருள் என்ற பெயரில் விநியோகிக்கப்படும் பொருட்கள் கடத்தப்பட்டு ,பிற மாநிலங்களில் மெருகூட்டி கூடுதல் விலைக்கு விற்பனை .இலவசங்களுக்காக அரசு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்தும் அது எல்லோருக்கும் ஒழுங்காக போய் சேரவில்லை என்பதை மறுக்க முடியாது. கட்டுப்பாடு அல்லது வரையறை இல்லாத இலவசங்களை அரசு அளிப்பதால் கடத்தலை நிச்சயம் ஒழிக்க முடியாது. மேலும் வரையறை இல்லாத இலவசம் காரணமாக அரசுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கு, வரி அல்லது கட்டண உயர்வு என்ற பெயரில் , பாவப்பட்ட மக்கள் தலையில் இடியென விழுவதுதான் வேதனையிலும் வேதனை.
ReplyDeleteஎல்லோருக்கும் Biomatic Card Ration கார்டு வழங்க வேண்டும் . அப்போது இந்தமாதிரி திருட்டுகள் தடுக்கப்படும். மேலும் வாங்கும்போது கைரேகை வாங்கி எல்லா விற்பனையும் கணிப்பொறி மூலம் Online Computer மூலம் பதிவு பண்ணினால் திருட்டை குறைத்து விடலாம். இதை செய்ய விட மாட்டாங்க இதான் உண்மை!