.

Pages

Sunday, January 11, 2015

அதிரை வாலிபரை காணவில்லை !

அதிரையை சேர்ந்தவர் காலஞ்சென்ற முகம்மது தம்பி. இவரது மகன் அப்துல் பாஸித் [ வயது 36 ] எலெக்ட்ரிஷியன் தொழில் செய்து வருகிறார். பிலால் நகரில் தனது மனைவியுடன் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 10 தினங்களாக தனது கணவர் அப்துல் பாஸித்தை காணவில்லை என அதிரை காவல்துறையில் புகார் தெரிவிக்க இருப்பதாக இவரது மனைவி கண்ணீர் மல்க நம்மிடம் கூறினார். மேலும் உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்ட இவரது கணவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதாகவும் வேதனையுடன் கூறினார்.

காணாமல் போன அன்று தம்மோடு அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன்பிறகு இவரை பற்றிய எந்தவித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் தமது உடல் நிலையும், மனநிலையும் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவரை கண்டு பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 9566907219

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.