.

Pages

Saturday, January 10, 2015

கழிவு நீர் வடிகாலில் மலத்தை அள்ளும் பேரூராட்சி ஊழியர்கள் !

அதிரையில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குமியும் குப்பை கூளங்களையும், கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் மிகவும் உதவியாக திகழ்பவர்கள் துப்புரவு தொழிலாளர்களே. இவர்கள் அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்கு ஆணிவேராக இருந்து வருகிறார்கள் என்றால் மிகையல்ல.

அதிரை பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் என பணியாற்றி வருகின்றார்கள். வளர்ச்சியடைந்து காணப்படும் அதிரை பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுதும் குமியும் குப்பை கூளங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலவில்லை. தினமும் அதிகாலையில் பணியை ஆரம்பிக்கும் இவர்கள் இரு குழுவினர்களாக பிரிந்து இரு வேறு பகுதிகளில் வலம் வருகின்றனர்.

சரி விசயத்திற்கு வருவோம்...
அதிரையின் பிராதான வர்த்தக பகுதியாக கருதப்படுகிற பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள தேவா ஜுவல்லரி கடை முதல் சபீயா ஸ்டோர் வரை உள்ள கழிவு நீர் செல்வதற்கு வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிகாலின் மேல்பகுதியை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்டது.

திறந்த நிலையில் காணப்படும் கழிவு நீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை சரிசெய்வதற்கு கடந்த சில நாட்களாக அதிரை பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது அப்பகுதியின் குடியியிருப்பிலிருந்து குழாய் மூலம் வெளியேறும் மலம் நேரடியாக கழிவு நீரில் கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மலம் கலக்கும் காட்சியை அப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்களை அழைத்து காட்டினர். பொதுமக்களால் ஏற்படும் இதுபோன்று சங்கடங்களால் பேரூராட்சி ஊழியர்களின் குமுறுலை கண்டு ஆர்வலர்கள் மிகவும் வேதனையடைந்தனர்.

கழிவு நீர் வடிகாலில் மலம் கலக்கும் காட்சி

1 comment:

  1. வாய்க்காலில் ஓடும் தண்ணீரை தான் பறவைகள், ஆடு மாடு இவைகள் தாகத்தை தீர்த்துக்கொள்கிறது இவை பற்றி இவர்கள் உணர்ந்தார்களா? அவர்களின் காலை கடன் முடிந்து விட்டது அவ்வளவு தானே? இவர்கள் மீது பேருரார்ச்சி நடவடிக்கை எடுக்குமா? தற்காலிகமாக தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.